இந்திரா காந்தி போல மாறிய கங்கனா - இணையத்தில் பற்றி எரியும் எமர்ஜென்சி ஃபர்ஸ்ட் லுக்

கங்கனா அடுத்ததாக நடிக்கும் எமர்ஜென்ஸி திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். அவர் இந்திராகாந்தி போன்ற வேடத்தில் நடிப்பதனால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது
Kangana Ranaut
Kangana RanautTwitter
Published on

எப்போதும் வித்தியாசமான மற்றும் சவாலான காதப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை கங்கனா ரனாவத்.

இவர் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களைத் தாண்டி இவர் கூறும் அரசியல் கருத்துக்களும் அடிக்கடி சர்ச்சையாவதுண்டு.

கங்கனா சமீபத்தில் நடித்த தாகட் திரைப்படம் சரியாக ஓடாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் எமர்ஜென்ஸி திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.

கங்கனா இந்திராகாந்தி போன்ற வேடத்தில் நடிப்பதனால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Kangana Ranaut
விக்ரம் டு கங்குபாய் : 2022 -ல் அதிக பிரபலமான இந்திய திரைப்படங்கள் - IMDB Rating இதுதான்

கடந்த வருடமே இந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் கங்கனா.

இதனை அவரே இயக்குவும் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"இதனால் நடிப்பதற்கான வாய்ப்புகளை தியாகம் செய்திருக்கிறேன்" என கங்கனா கூறியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக Manikarnika: The Queen of Jhansi என்ற படத்தையும் கங்கனா இயக்கியிருக்கிறார் என்பதையும் மனதில்கொண்டு எமர்ஜென்சிக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Kangana Ranaut
சாம்ராட் பிருத்விராஜ்: கங்கனா, அக்‌ஷய் குமாரின் திரைப்படங்கள் தோல்வியடைவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com