T P Gajendran: பிரபல இயக்குநர், நகைச்சுவை நடிகர் டி பி கஜேந்திரன் மறைவு - முதல்வர் இரங்கல்
T P Gajendran: பிரபல இயக்குநர், நகைச்சுவை நடிகர் டி பி கஜேந்திரன் மறைவு - முதல்வர் இரங்கல்Twitter

T P Gajendran: பிரபல இயக்குநர், நகைச்சுவை நடிகர் டி பி கஜேந்திரன் மறைவு - முதல்வர் இரங்கல்

சிறுநீரக பிரச்னைக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
Published on

பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

தமிழ் சினிமா நகைச்சுவையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் டி.பி.கஜேந்திரன்.

காமெடி ஜாம்பவான்களான வடிவேலு, விவேக் உடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் அசத்தியிருப்பார்.

நம்மை சிரிக்க வைத்து வாழ்ந்தவர் இன்று (பிப்ரவரி 5) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தூத்துக்குடியை சொந்த ஊராக கொண்ட இவருக்கு வயது 68.

சிறுநீரக பிரச்னைக்காக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

1985ம் ஆண்டு வெளியான சிதம்பர ரகசியம் படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். 1988ல் 'வீடு மனைவி மக்கள்' படத்தின் மூலம் இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கினார்.

இவர் இயக்கிய படங்களில் எங்க ஊரு காவல்காரன், தாயா தாரமா, பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பட்ஜெட் பத்மநாபன், பாட்டு வாத்தியார், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் போன்றவை குறிப்பிடத்தக்கன.

மகனே, என் மருமனே இவர் இயக்கிய கடைசித் திரைப்படம். கே.பாலசந்தர், விசு உள்ளிட்ட பிரபல இயக்குநர்களுடன் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

T P Gajendran: பிரபல இயக்குநர், நகைச்சுவை நடிகர் டி பி கஜேந்திரன் மறைவு - முதல்வர் இரங்கல்
Vani Jairam : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்| PlayList

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் டி.பி.கஜேந்திரனும் சென்னை விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இதனால் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

"பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர் திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

T P Gajendran: பிரபல இயக்குநர், நகைச்சுவை நடிகர் டி பி கஜேந்திரன் மறைவு - முதல்வர் இரங்கல்
பிரதாப் போத்தான் மறைவு : அவர் இயக்கிய படங்கள் எவைத் தெரியுமா? | Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com