Father's Day: மனதை நெகிழ வைக்கும் அப்பா பாடல்கள் 👨‍👧👨‍👦

சில சமயங்களில் உறவுகளின் ஆழத்தை பாடல்கள் உணர வைக்கும், அப்படி அப்பாக்களின் பாசத்தை உணர்த்தும் பாடல்களின் தொகுப்பைக் காணலாம்.
Father's day
Father's dayTwitter

எப்போதுமே அப்பாக்கள் மகன்களுக்கு முதல் hero-வாகவும் மகள்களுக்கு முதல் love - வாகவும் இருப்பார்கள்.

வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் அப்பாக்களை விட இப்படி தான் வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்து காண்பிக்கும் அப்பாக்கள் அதிகம். ஒவ்வொரு வீட்டிலும் குடும்பத்தின் ஆணிவேராக அப்பாக்கள் இருப்பார்கள்.

அப்பாக்கள் தினத்தை முன்னிட்டு அப்பாவின் பாசம் குறித்து தமிழ் சினிமாவில் வந்த பாச பாடல்களின் தொகுப்பு இதோ...

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த கனா படத்தில் அவருக்கு அப்பாவாக சத்தியராஜ் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் வாயாடி பெத்த புள்ள பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

விஸ்வாசம் படத்தில் வெளியான கண்ணான கண்ணே... பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக த்ரிஷா நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் வா... வா... என் தேவதையே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

ஜெயம் ரவியும் அவரது மகனும் நடித்திருக்கும் டிக் டிக் டிக் படத்தில் வரும் குறும்பா பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தந்தையை பிரியும் மகனின் வலியை உணர்த்தும் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் மனத்தை உருகச் செய்யும்.

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் இடம்பெற்ற உனகென்ன வேணும் சொல்லு பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தங்கமீன்கள் படத்தில் வெளியான ஆனந்த யாழை மீட்டுகிறாய்
பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வ திருமகன் படத்தில் வந்த ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

Father's day
இளையராஜா : நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com