நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா தொற்று ஏற்கனவே இருந்தது. அதற்காக சிகிச்சை பெற்று அவர் குணமடைந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவரது இறுதிச்சடங்குகள் இன்று (புதன்கிழமை) நடக்கும் என்று தெரிகிறது.
சிவாஜி கணேசன் நடித்த 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நடிகை மீனா. 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ரஜினிகாந்துடன் சிறுமியாக நடித்தார். 'என் ராசாவின் மனசிலே' படத்தில் கதாநாயகி ஆனார். 'எஜமான்', 'அவ்வை சண்முகி', 'முத்து', 'ராஜகுமாரன்', 'நாட்டாமை' உள்பட ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார். தென்னிந்திய கதாநாயகிகளில் மிக முக்கியமான கதாநாயகியாகவும் மீனா திகழ்ந்தார்.
இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர் வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரே ஒரு மகள் இருக்கிறார். நைனிகாவும் சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்யுடன் 'தெறி', அரவிந்த்சாமியுடன் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் வித்யாசாகர். 47 வயதாகும் இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஞினீயர். மீனா உச்சத்தில் இருந்த போதும் இவர் எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருந்து தள்ளியே இருந்திருக்கிறார்.
2009 ஆம் ஆண்டு இவருக்கும் மீனாவுக்கு திருமணம் நடந்தது.
ஜனவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அதற்கான உரிய சிகிச்சை பெற்றார். ஆனால், அதற்கு பின்னரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிலைமை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
இது குறித்து விகடன் வெளியிட்டுள்ள செய்தியில், அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் தொடர்பான நோய் இருந்ததாக தெரிவிக்கிறது.
வித்யாசாகருக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து மீனாவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு அவருக்கு இருந்தது. அது இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடிய பிரச்னை. அதாவது புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கிறபோது உண்டாகக் கூடிய நோய். பெங்களூருவுல அவருடைய வீட்டுக்குப் பக்கத்துல நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டதா தெரியுது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்தது." என்கிறது விகடன் செய்தி.
இது குறித்து விரிவாக விகடன் செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust