Grammy 2022: ஏ.ஆர்.ரஹ்மானின் செல்ஃபி, செலென்ஸ்கியின் உருக்கமான பேச்சு - களைகட்டும் கிராமி

கிராமி விருது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அதில் “Parenting” எனத் தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
AR Rahman, Amir
AR Rahman, Amir Twitter

இசை உலகின் உயரிய விருதான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. சிறந்த இசைக்கலைஞர்களை கவுரவுக்கும் விதமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த இசைக்கச்சேரிகளும் களைக்கட்டக் கோலாகலமாக விழா நடந்து வருகிறது.

நடைபெற்று வரும் 64வது கிராமி விருது வழங்கும் விழாவில் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைன் நாட்டின் அதிபர் செலென்ஸ்கி காணொளி மூலமாகத் தோன்றி பேசினார், மிக உருக்கமான கருத்துக்களைப் பேசிய அவர், “நாங்கள் ரஷ்யாவை எதிர்த்து எங்கள் நிலத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். வெடிகுண்டுகள் மூலம் இங்கு மோசமான அமைதி நிலவுகிறது. அதனை உங்கள் இசையால் நிரப்புங்கள்” எனப் பேசியிருந்தார். மேலும் போரில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதை செலென்ஸ்கி நினைவுகூர்ந்தார்.

கிராமி விருது நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். அதில் “Parenting” எனத் தலைப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.

86 பிரிவுகளில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வருட கிராமி விருதுகளில் முக்கியமான சில பிரிவுகளின் வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

1. சிறந்த இசை பதிவு (Record of the Year) - 'Leave The Door Open' ஆல்பத்துக்காக Silk Sonic

2. சிறந்த ஆல்பம் (Album of the Year) - 'We Are' ஆல்பத்துக்காக Jon Batiste மற்றும் குழுவினர்

3. சிறந்த பாடல் (Song Of The Year) - பாடல் எழுதியவருக்கான இந்த விருது 'Leave The Door Open' ஆல்பத்துக்காக Brandon Anderson, Christopher Brody Brown, Dernst Emile II & Bruno Mars

4. சிறந்த புதுமுக கலைஞர் (Best New Artist) - புதிதாக அறிமுகமாகும் கலைஞருக்கான விருது சென்ஷேனல் பாடகி Olivia Rodrigo

5. சிறந்த பாப் சோலோ (Best Pop Solo Performance) - 'drivers license' ஆல்பத்துக்காக Olivia Rodrigo

6. சிறந்த குழு (Best Pop Duo/Group Performance) - 'Kiss Me More' ஆல்பத்துக்காக Doja Cat மற்றும் SZA

7. சிறந்த பாரம்பரிய பாப் குரல் (Best Traditional Pop Vocal Album) -Love For Sale ஆல்பத்துக்காக Tony Bennett மற்றும் Lady Gaga

8. சிறந்த பாப் குரல் (Best Pop Vocal Album) -Sour ஆல்பத்துக்காக Olivia Rodrigo

9. சிறந்த மியூசிக்கல் திரைப்படம் (Best Music Film) - Summer Of Soul படத்திற்கு

10. சிறந்த உலக இசை ஆல்பம் (Best Global Music Album) - Mother Nature ஆல்பத்துக்காக Angelique Kidjo

11. சிறந்த ராப் பாடல் (Best Rap Song) - Jail ஆல்பத்துக்கு

12. Best Jazz Vocal Album - Songwrights Apothecary Lab ஆல்பத்துக்காக பாடகி Esperanza Spalding

BTS
BTSTwitter

இளம் தலைமுறையினரின் ஃபேவரைட் இசைக்குழுவான BTS குழுவின் கச்சேரியும் கிராமியில் நடைபெறுகிறது

AR Rahman, Amir
Oscar 2022 : CODA, DUNE, Encanto - ஆஸ்கரில் கவனம் ஈர்த்த படங்கள், விருதுப் பட்டியல்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com