HBD Santhosh Narayanan: மனதை துளைக்கும் இசைக்கு சொந்தகாரரின் இந்த பாடல்களை கேட்டது உண்டா?

இசை நம் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. காதலிக்க, கொண்டாட, சோகத்தை வெளிப்படுத்த, கோபத்தைப் போட்டுடைக்க என எல்லாவற்றுக்கும் இருக்கும் இசை தான் நாம் வாழ்தலின் கருவி. மனதை மிக இரகசியமாக தூண்டி உணர்வுகளை எழவைக்கும் இசைக்குச் சொந்தக்காரரான சந்தோஷ் நாராயணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!
சந்தோஷ் நராயணன்
சந்தோஷ் நராயணன்Twitter
Published on

சந்தோஷ் நாராயணன் சினி இசையில் கால் வைத்த முதல் படம் அட்டகத்தி. சென்னையின் புறநகர் கதைகளத்துக்கு ஏற்ற பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். ரூட்டு தலன் பாடும் கானா பாடல் அப்போது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அது தவிர கல்லூரி காதலை அப்பட்டமாகவும் மென்மையாக கூறும் ஆசை ஒரு புல்வெளி, ஏமாற்றத்தின் வெளிப்பாடான வழி பார்த்திருந்தேன் என இந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் மனதைத் தொடும்.

கர்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணின் இசை முக்கியப் படிகட்டு என்றால் மிகையாகாது. சநா இசையுடன் பிரதீப்பின் குரலும் இணையும் போது ஏற்படும் அலாதியான இன்பத்தை இப்பாடல் மூலம் செவிகள் உணரும்.

மனிதி வெளியே வா... பெண்களின் விடுதலை குறித்த படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தாலும் ஆழமாக ரேடியோ, தொலைக்காட்சிகளில் அவற்றைப் பாட செய்தது சநாவின் இசை. "அரை குறை ஆடை காரணமா? அந்த சிசுவையும் சேலையில் மூடனுமா" என கேள்விகள் கேட்கும் இந்தப் பாடல். வாடி ராசாத்தி, போகிறேன் என சநாவின் பெண்கள் குறித்த பாடல்களை தனித் தொகுப்பாக்கலாம்.

"அவள்" சநாவின் மிகச் சிறந்த காதல் பாடல்கள் வரிசையில் அவள் படலுக்கென்று தனியிடம் எப்போதுமுண்டு. "முதல்ல இருந்து ஆரம்பிக்கலாமா" என உதயநிதி அப்பாவியாக கேட்பதைத் தொடர்ந்த காதலர்களின் உரையாடல்கள் பாடலாக விரிய சந்தோஷ் அதன் உணர்வுகளை மிகச் சரியாக இசையில் கடத்தியிருப்பார். காதல் மட்டுமின்றி தோல்வி, உத்வேகத்தை பேசும் பொய் வாழ்வா, முன் செல்லடா பாடல்களும் மனிதன் திரைப்படத்தின் தூண்களாக நிற்கும்.

வட சென்னை படத்தில் என்னடி மாயாவி நீ உள்பட பிற பாடல்கள் பெற்ற வரவேற்புக்கு தகுதியானதாக இருந்தும் வெகு மக்களின் கவனத்தை பெறமுடியாமல் போன பாடல் "கார்குழல் கடவையே" வரிகளாகவும் மிக முக்கியமான இடத்தை இந்தப் பாடல் பெறும்.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் அனைத்து படங்களுக்கும் உணர்ச்சிகரமான பாடல்களையும் வலிமையான பின்ணனி இசையையும் வழங்கி வருகிறார் சநா. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் படங்களான கபாலி, காலா இரண்டின் இசையும் காதப்பாத்திரங்களின் மனங்களை நம் முன் விரித்துப் போட்டு அவர்களுடன் கொண்டாடவும், அவர்களுக்காக கலங்கவும், போராடவும் தூண்டும். மெட்ராஸ் படத்தின் சென்னை வட சென்னை, கபாலியில் மாய நதி, உலகம் ஒருவனுக்கா?, காலாவின் உரிமை மீட்போம், கண்ணம்மா சார்பட்டா படத்தில் வானம் விடிஞ்சிருச்சி, நீயே ஒளி போன்ற பாடல்கள் ரஞ்சித் - சநா கூட்டணியின் உறுதியை உரைக்கக் கூடியன.

சநா காதல், கொண்டாட்டம் மட்டுமின்றி சோகத்தையும் மிக சீராக இசையில் கடத்தக் கூடியவர் என்பதற்கு இந்தப் பாடல் ஓர் உதாரணம். ஓர் இளம் பெண்ணின் ஆழமான காதல் சோகத்தை பேசக் கூடிய இந்தப் பாடலுக்கு தீயின் குரலை தேர்ந்தெடுத்தது கூடுதல் சிறப்பு.

கண் தெரியாக இருவர் காதலிக்கின்றனர். கண் தெரியாதவர்களின் உலகமே சத்தங்கள் அல்லது இசை தான். எனில் அவர்களின் காதலுக்கு மீட்டப்படும் இசை எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டுமோ அதனை தெளிவக செய்து முடித்தார் சநா. இந்த படத்தின் அத்தனை பாடல்களும் அந்த பொறுப்புணர்ச்சியுடன் தான் இயற்றப்பட்டிருக்கும்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஓபனிங் பாடலான கருப்பி மிக வித்தியாசமான முயற்சியாக இருக்கும். அதே போன்ற மற்றொரு முயற்சி தான் நான் யார்? முகத்தில் நீலம் பூசி ஆக்ரோஷம் பொங்க தெருக்களில் நான் யார் என ரௌத்திரம் கொண்டு ஓடும் கதிரின் முக பாவங்களை உணர்ச்சி பிளம்புகளாக மாற்றியது சநாவின் இசை.

ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்? பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார்? நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? குடுசைக்குள் கதறி எரிந்த நான் யார்?

எனும் மாரி செல்வராஜின் கேள்விகள் நம் மனதிலும் பரியனின் கோவத்தை எழச் செய்கிறதென்றால் அதற்கு காரணம் சநாவின் இசை!

எனக்கு ராஜாவா நான் வாழுறேன், எவன்டா எனக்கு கஸ்டடி என ரீல்ஸ்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்க சநா மறந்ததில்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com