
Hrithik Roshan
பாலிவுட்-ன் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஹ்ரித்திக் ரோஷன். பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் இவர் தற்போது விக்ரம் வேதா ரீமேக்கில் நடித்து வருகிறார். 48 வயதான இவருக்கு முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சபா ஆசாத் நடிகையும் பாடகியும் ஆவார். சமீபத்தில் ராக்கெட் பாய் வெப் சீரிசிலும் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஹ்ரித்திக்கும் இவரும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால் இருவரும் காதலிப்பதாக நெட்டிசன்கள் கிளப்பி விட்டிருக்கின்றனர்.
நேற்று சபா ஆசாத் கான் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் பாலிவுட்டில் இன்றைய ஹாட் டாப்பிக். அந்த புகைப்படத்தில் பிரிட்டிஷ் நடிகை Audrey Hepburn-ன் காஸ்டியூமில் கருப்பு நிற டீசர்ட் உடன் இருந்தார் சபா. அதில் ஹ்ரித்திக் ரோஷன் "Timeless" என கமென்ட் செய்திருந்தார்.
இந்த கமெட்டில் குஷியாகியுள்ள ரசிகர்கள், இருவரும் விரைவில் தங்களது ரிலேஷன் ஷிப் ஸ்டேட்டஸை வெளியிடுவார்கள் என எதிர்பார்கின்றனர்.