yuvan shankar raja
yuvan shankar rajatwitter

மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இளையராஜா - யுவன் பிறந்த கதையை பகிர்ந்து நெகிழ்ச்சி

லிட்டில் மேஸ்டிரோ என்றழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜா இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது தந்தையும், இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜாவும் வாழ்த்து தெரிவித்தார்.
Published on

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. 70,80களில் இசைஞானி கொடிகட்டி பறந்தது போல, 90s கிட்ஸின் வாழ்வில் ஓர் அழியா சுவடு யுவன். ஏ ஆர் ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், ஏன் இளையராஜாவே யுவனின் சமகால இசையமைப்பாளர் தான். எனினும், யுவனின் இசையை புறக்கணிக்கக் கூடியவர் யாரும் இல்லை. ரஜினி கமல் காலத்தில் பிஜிஎம் கிங் என அறியப்பட்ட இளையராஜாவின் வாரிசாக வந்தமைந்தார், பிஜிஎம் அமைப்பதில் யுவன்.

அஜித்துக்கு பில்லா, மங்காத்தா, சூரியாவுக்கு மௌனம் பேசியதே, சிம்புவுக்கு மன்மதன், வல்லவன் என அடுக்கிக் கொண்டே போகலாம். யுவன் இல்லாமல் என் கரியரில் ஒரு பக்கம் கூட இல்லை என தனுஷ் ஒரு மேடையில் கூறியிருந்தார்.

லிட்டில் மேஸ்டிரோ என்றழைக்கப்படும் யுவன் சங்கர் ராஜா இன்று 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவரது தந்தையும், இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜாவும் வாழ்த்து தெரிவித்தார்.

யுவன் சங்கர் ராஜா பிறந்த கதை என்ன எனக் கூறி அவர் வெளியுட்டள்ள வீடியோ, ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

அந்த வீடியோவில் இளையராஜா கூறியதாவது, அந்த காலத்தில் ஆழியார் டேமின் விருந்தினர் மாளிகைக்கு சென்று படங்களுக்கு பாடல்கள் கம்போஸ் செய்வது வழக்கம். இரண்டு, மூன்று நாட்கள் அங்கு தங்கி நான்கு ஐந்து படங்களுக்கு இசையமைக்க செல்வோம்.

அப்படி ஒரு முறை இயக்குநர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கே ஆர் ஜி அவர்கள் என்னை ஆழியார் கெஸ்ட் ஹவுஸுக்கு கூட்டி செல்கின்றனர். என்னுடன் பக்கவாத்தியங்கள் வாசிக்கும் என் குழுவும் வந்திருந்தது.

தயாரிப்பாளர் கே ஆர் ஜிக்கு கோவையில் ஒரு வீடு இருந்ததால் அங்கு சென்று வருவார். அப்படி ஒரு நாள் மாலையில் வந்து அவர் என்னிடம், 'உன் wife -க்கு டெலிவரி ஆய்டுச்சு..பையன் பொறந்துருக்கான்' என்றார்.

எனக்கு அப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் அப்போது இசையமைத்துக்கொண்டிருந்தது செனொரிட்டா ஐ லவ் யூ பாடல். படத்தின் பெயர் ஜானி, சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படம். தயாரிப்பாளர் கே ஆர் ஜி. இயக்குநர் மகேந்திரன்.

'கே ஆர் ஜி வந்து சொன்ன நேரத்தில் பொறந்தது தான் யுவன்...Yuvan, Happy Birthday Yuvan!'

இளையராஜாவின் இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com