IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்

பிப்ரவரி 20ஆம் தேதி முதலான இந்த வாரத்தில் அதிகம் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்ற தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் நடிகை ராஷி கன்னா இருக்கிறார்.
IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்
IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்ட்விட்டர்

இந்திய திரையுலக நட்சத்திரங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் முதல் 20 பேரின் பெயர்களை வெளியிட்டிருக்கிறது IMDb தளம்.

திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் குறித்த தகவல்களை வெளியிடும் தளமான IMDb, தனது செயலியில் புதிய அம்சம் ஒன்றை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பாப்புலர் இந்தியன் செலிபிரிட்டீஸ் என்கிற அந்த அம்சம், இந்திய அளவில் மக்கள் மத்தியில் பிரபலாமாக இருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலை வெளியிடுகிறது.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், அவர்களது சமீபத்திய அல்லது சிறந்த சினிமாக்கள் அல்லது வெப் சீரீஸ்கள் என்ன என்பது போன்ற தகவல்களை இந்த அம்சம் பயனர்களுக்கு எடுத்துக்காட்டும். அதன் மூலம் படங்களை, வெப் சீரீஸ்களை நாம் பார்த்து ரசிக்கலாம்.

ஒவ்வொரு வாரமும் யார் டிரெண்டிங்கில் இருக்கின்றனர் என்பது பொறுத்து இந்த பட்டியல் மாறும். உலகளவில் மாதம்தோறும் ஐஎம்டிபி தளத்திற்கு வரும் 200 மில்லியன் பார்வையாளர்களின் தேடல்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் உருவாகிறது.

அந்த வகையில், பிப்ரவரி 20ஆம் தேதி முதலான இந்த வாரத்தில் அதிகம் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்ற தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் முதலிடத்தில் நடிகை ராஷி கன்னா இருக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான், மூன்றாவது இடத்தில் தமிழ் நடிகர் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளனர்.

IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்
2022ல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள்: 15வது இடத்தில் நடிகர் விஜய் - முதலிடத்தில் யார்?
Yash
YashTwitter

ரெஜினா கசாண்டிரா, தீபிகா படுகோன், அதித்யா சோப்ரா, அனுபம் கேர், ராம் சரண், யஷ், சல்மான் கான் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

இந்த பட்டியலில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸி வெப் சீரீஸில் நடித்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். தவிர, ஃபர்சி இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணா டிகே என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.

நடிகை கியாரா அத்வானியும் இந்த பட்டியலில் உள்ளார். இவர் சமீபத்தில் தான் தன் காதலரும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்திராவை கரம் பிடித்தார். நெட்பிளிக்ஸில் வெளியான கிளாஸ் தொடரின் கதாநாயகி அஞ்சலி சிவராமனும் இடம்பெற்றிருந்தார்.

ஐஎம்டிபியின் இந்த பட்டியல் மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாற்றப்படும்.

இந்தியாவில் ஐஎம்டிபி செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அம்சம் செயல்படும்.

இந்த அம்சத்தின் மூலம் படங்களின் டிரெய்லர்கள் பார்ப்பது, நாம் பார்த்த படங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு ரிவ்யூ எழுதுவது, ரேட்டிங் கொடுப்பது போன்றவற்றை நாம் செய்துகொள்ளலாம்.

IMDb: விஜய் சேதுபதி முதல் ராம் சரண் வரை - டாப் 20 இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்
அஜித், விஜய் எல்லாம் இல்ல; உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியல்- டாம் க்ரூஸை விஞ்சிய இந்தியர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com