KGF 2 : இரும்பு பட்டறை டூ கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் - யார் இந்த ரவி பஸ்ரூர்?

தனது தந்தையின் இரும்பு பட்டறையில் சிற்பங்களை வடிவமைக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார் ரவி பஸ்ரூர். 'உக்ரம்' என்ற படத்திற்கு இசையமைத்து தனது திரை பயணத்தைத் தொடங்கிய ரவி பஸ்ரூருக்கு, இயக்குநர் பிரசாந்த் நீலன் தான் முதல் முதலாக கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
ரவி பஸ்ரூர்
ரவி பஸ்ரூர்twitter
Published on

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தான் “கேஜிஎஃப்”. கோலார் தங்க வயல் தொடர்பான கதைக்களத்துடன் வெளியான இப்படம் பல மொழிகளில் பெரு வெற்றி பெற்றது.

வசனம் மற்றும் இசைக்காகவே தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகமெங்கும் பான் இந்தியா படமாக வெளியானது.

இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அந்த அளவிற்குப் படத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. படத்தின் பாசிடிவ் ரிவியூக்காகவே கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் பார்க்காதவர்கள் கூட 2வது பாகம் பார்க்கத் திரையரங்குகளில் அலைமோதுகின்றனர்

ரவி பஸ்ரூர் - யாஷ்
ரவி பஸ்ரூர் - யாஷ்twitter

படத்தை மட்டுமல்ல படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் ரசிகர்கள் ரசிக்க தவறவில்லை.

குறிப்பாக கேஜிஎஃப் 2 படத்தின் எடிட்டரான உஜ்வல் குல்கர்னியின் பங்கு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. 19 வயது இளைஞரான இவரின் பொறுப்பு பெரியளவில் உள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவரின் பணியைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

உஜ்வல் குல்கர்னி
உஜ்வல் குல்கர்னிtwitter

அடுத்ததாக கேஜிஎஃப் படத்தின் இசை. அந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது இசை. தன் இசையின் மூலம் கேஜிஃப் படம் பார்க்கச் சென்றவர்களை புல்லரிக்கச் செய்துள்ளார் ரவி பஸ்ரூர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இரும்புப் பட்டறையில் வேலை செய்துள்ளார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்

கர்நாடகாவில், குண்டாபுரா தாலுக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ரவி பஸ்ருர், சிறு வயது முதலே இசையின் மீது இவருக்கு ஆர்வம் இருந்துள்ளது.

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு தனது தந்தையின் இரும்பு பட்டறையில் சிற்பங்களை வடிவமைக்கும் தொழிலைச் செய்து வந்துள்ளார். 'உக்ரம்' என்ற படத்திற்கு இசையமைத்து தனது திரை பயணத்தைத் தொடங்கிய ரவி பஸ்ரூருக்கு, இயக்குநர் பிரசாந்த் நீலன்தான் முதல் முதலாக கே.ஜி.எஃப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பை கொடுத்துள்ளார்.

ரவி பஸ்ரூர்
ரவி பஸ்ரூர்twitter
ரவி பஸ்ரூர்
KGF 2 box office : ஒரே நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த ‘கே.ஜி.எஃப்2’

பிறகு அடுத்தடுத்து கன்னடப் படங்களை மட்டுமே இசையமைத்து வந்த இவரை கே.ஜி.எஃப் படம் உலகம் முழுவதும் அடையாளம் காட்டியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com