வெந்து தணிந்தது காடு: 12 ஆண்டுகளுக்கு முன்னே ரிவீல் செய்த GVM - கனவுப்படம் இது தானா?

புதுப்பேட்டை போன்ற கேங்ஸ்டர் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது வெந்து தணிந்தது காடு. இந்த கதையை விண்ணை தாண்டி வருவாயா படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடுTwitter
Published on

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் சித்தி இத்னானி வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றனர். முத்துவீரன் என்ற திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்து இளைஞன், மும்பையில் எப்படி தாதாவாகிறார் என்பது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.

இதுபோலவே நாயகன், புதுப்பேட்டை போன்ற படங்கள் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் வந்துவிட்டது குறிப்பிடத்தகக்து. இந்த கதையை விண்ணை தாண்டி வருவாயா படத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து பலவிதமான கான்ஸ்பிரசி தியரிகளை கதைத்து வருகின்றனர் ரசிகர்கள். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் சிம்பு கதாப்பாத்திரம் தனது வாழ்க்கையை ஒத்தது என்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல நேர்காணல்களில் கூறியிருப்பார்.

அதனைக்கொண்டு இந்த கதை கௌதமின் கனவுப் படமாக இருக்கலாம் என கூறிவந்தனர். ஆனால் அப்படி எதுவும் இருக்க முடியாது என்பது தான் உண்மை.

jeyamohan - simbu - gvm
jeyamohan - simbu - gvmTwitter

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கேங்ஸ்டர் படம் இயக்க வேண்டும் என்று நினைத்தது உண்மை. ஆனால் இந்த கதை எழுத்தாளர் ஜெயமோகனுடையது. அவரே வசனங்கள் உள்ளிட்ட பணிகளையும் செய்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு: வென்றதா சிம்பு, GVM, ARR கூட்டணி? படம் எப்படி இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com