அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை, எழுச்சியை பேசும் படங்களை இயக்கியுள்ள இவர் சமுகத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை சார்ந்த முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தலித் வரலாற்று மாதம் கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைத்திரு விழா எனும் பெயரில் பல விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன. சென்னை மற்றும் புதுவையில் திரைப்பட விழா மற்றும் ஓவிய, சிற்ப கண்காட்சிகள் நடைபெற்ற நிலையில், அதன் நிறைவாக மதுரையில் "தலித் இலக்கிய கூடுகை" நிகழ்வு துவங்கியது.
ஏப்ரல் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இலக்கிய விழக்களை குறித்து பேசிய பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ரஞ்சித்.
இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு, “இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. இந்தியர்களை வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் எனப் பிரித்துப் பார்க்கின்றனர். அவர்கள் தென்னிந்தியர்களை விட வட இந்தியர்களை உயர்வானவர்களாக எண்ணுகின்றனர் எனவே இந்தியை ஏற்க மாட்டோம். இந்தியாவிற்குத் தமிழ் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.
இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும்.திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன்” என்றார் ரஞ்சித்.
இளையராஜா மோடி மற்றும் அம்பேத்கரை ஒப்பிட்டு எழுதியது குறித்த கேள்விக்கு, “இளையராஜாவை விமர்சித்தவர்களின் மனநிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் அதனை எதிர்க்கிறேன்”
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com