"It's Time to Settle" - கல்யாணத்தை அறிவித்த யாஷிகா ஆனந்த்
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. பிக்பாஸ் சீசன் 2ல் பங்கு பெற்றதன் மூலம் ரசிகர்களையும் சம்பாதித்துக்கொண்டார். எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர், பல மாதங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார். சில படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
16 வயதில் திரைத்துறைக்குள் நுழைந்த யாஷிகாவுக்கு இப்போது 22 வயது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை திருமணம் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு “ஐடியா இல்ல பாஸ்” என பதில் சொல்லிவந்த யாஷிகா தற்போது தனக்குத் திருமணம் நடக்கப்போவதாகவும் அதுவும் அரேஞ் மேரேஜ் என்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஹாட்ர்ஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர். மற்றொருபுறம் இன்று ஏப்ரல் 1ம் தேதியானதால் யாஷிகா ரசிகர்களை fool செய்ய இதனைப் பதிவிட்டுள்ளார் என்றும் அதனால் தான் ஸ்டோரியில் மட்டும் பதிவிட்டுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

