ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

Instagram

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் : “அம்மாவ கூட பாக்க விடல” ஆன்மீக பாதைக்கு மாறிய பாலிவுட் நடிகை

திரும்பும் பக்கமெல்லாம் பிரச்சனைகள் சூழ்ந்திருப்பதால் ஆன்மீகத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் ஜாக்குலின். பிரச்சினையில் இருந்து சுயமாக வெளியில் வருவது மற்றும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை அதிகமாகப் படிக்க ஆரம்பித்துள்ளார்.
Published on

தொழிலதிபரின் மனைவியை மிரட்டி 200 கோடி கொள்ளையடித்த விவகாரத்தில் சுகேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது டெல்லி சிறையில் இருக்கும் இவர் தொடர்ந்து கொள்ளை மேல் கொள்ளை அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தவர். சமீபமாகக் கொள்ளையடித்த பணத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு ஆடம்பர கிஃப்ட்கள் வாங்கிக் கொடுத்து ஆனந்தப்படுத்தியிருக்கிறார். அந்த வரிசையில் வரும் நடிகை தான் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். சுகேஷும் ஜாக்குலினும் காதலித்து வந்துள்ளனர். ஜாக்குலினுக்கு சுகேஷ் பல ஆடம்பர பொருட்களைப் பரிசுகளாகக் கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலினும் அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருக்கிறார். சுகேஷ் புகாருடன் தொடர்பிருப்பதால் ஜாக்குலின் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜாக்குலினின் அம்மா வெளிநாட்டில் இருக்கிறார். தற்போது அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அவரைப் பார்க்க முடியாமல் இருக்கிறார் ஜாக்குலின். அமலாக்கத்துறை ஜாக்குலினிடம் பல முறை விசாரித்திருக்கிறது. இருந்தும் ஜாக்குலின் வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

<div class="paragraphs"><p>ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்</p></div>

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

Instagram

இதற்கிடையில் ஜாக்குலின் மற்றும் சுகேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ட்ரெண்டாகி வந்தன. இதனால் மன உளைச்சலடைந்த ஜாக்குலின் தனது புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

<div class="paragraphs"><p>ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்</p></div>
சுகேஷ் சந்திரசேகர் : கருணாநிதி பேரன், ஜெ உறவினர், Jacqueline நண்பர் - யார் இவர்?

திரும்பும் பக்கமெல்லாம் பிரச்சனைகள் சூழ்ந்திருப்பதால் ஆன்மீகத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் ஜாக்குலின். பிரச்சினையில் இருந்து சுயமாக வெளியில் வருவது மற்றும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை அதிகமாகப் படிக்க ஆரம்பித்துள்ளார்.


ஜாக்குலினின் நெருங்கிய நண்பர்கள், "ஜாக்குலின் பொதுவாகவே ஆன்கமித்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இப்போது அவற்றில் அதிகமாக ஈடுபட்டுள்ளார். அதோடு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது கடினமான பாதையைக் கடந்து கொண்டிருக்கிறார்" எனக் கூறியுள்ளனர். காதலனாக நம்பியவர் சிறையில், உடல் நலம் சரியில்லாத அம்மாவைக் காண முடியாத நிலை, அமலாக்கப் பிரிவினர் விசாரணை எனத் துவண்டு போயிருக்கிறார் ஜாக்குலின். இப்போது அமலாக்கத்துறையினர் விசாரணை முடிவில் ஜாக்குலினின் அம்மாவும் சகோதரியும் சுகேஷிடம் இருந்து பண உதவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Newssense
newssense.vikatan.com