ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் To ஜப்பான் : OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் To ஜப்பான் : OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் To ஜப்பான் : OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?Twitter

திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகிறது. இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஓடிடி தளத்திலும் கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படம் டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிட்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஜப்பான்

நடிகர் கார்த்தியின் 75வது படமான ஜப்பான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவம்பர் 10ஆம்தேதி வெளியானது. ஆனால் இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஜப்பான் படம் வரும் 11ஆம் தேதி நெட்பிட்ளிக்ஸில் வெளியாக உள்ளது.

கூச முனுசாமி வீரப்பன்

அறிமுக இயக்குநர் ஷரத் ஜோதி இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் 'கூச முனுசாமி வீரப்பன்'.

இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

கடக் சிங்

தேசிய விருது வென்ற இயக்குநர் அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கத்தில், பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கடக் சிங்’. இப்படம், டிசம்பர் 8ஆம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் To ஜப்பான் : OTT-யில் இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?
தமிழ்சினிமா: இந்த ஆண்டு வெளியானதில் மிஸ் செய்யக்கூடாத படங்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com