ஆஸ்கர் நிகழ்ச்சியில் ஆடை இல்லாமல் தோன்றிய ஜான் சீனா!

ஆடை இல்லாமல் தோன்ற கூச்சப்பட்டவராக ஜான் சீனா அட்டையை வைத்து மறைத்துக்கொண்டு மைக் அருகில் வந்தார். அவர் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உரையாடும் போது "ஆணின் நிர்வாண உடல் ஒன்றும் நகைச்சுவை அல்ல" என்றார்.
ஆஸ்கர் நிகழ்ச்சியில் ஆடை இல்லாமல் தோன்றிய ஜான் சீனா!
ஆஸ்கர் நிகழ்ச்சியில் ஆடை இல்லாமல் தோன்றிய ஜான் சீனா!Twitter

முன்னாள் WWE வீரரும் ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா ஆஸ்கர் மேடையில் ஆடை இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2024ம் ஆண்டுக்கான அகாடமி அவார்ட்ஸ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க ஜான் சீனா நிர்வாணமாக மேடைக்கு வந்தார்.

ஜான் சீனா WWE காலத்தில் இருந்தே நகைச்சுவை உணர்வு மிகுந்தவர் என்பது நமக்குத் தெரியும். இப்போது ஹாலிவுட் படங்களிலும் ஜான் சீனா நகைச்சுவை நடிகராகவே திகழ்கிறார். இருந்தாலும் அவரது நகைச்சுவைகள் இந்த அளவு செல்லும் என யாரும் நினைத்திருக்கவில்லை.

ஆடை இல்லாமல் தோன்ற கூச்சப்பட்டவராக ஜான் சீனா அட்டையை வைத்து மறைத்துக்கொண்டு மைக் அருகில் வந்தார். அவர் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உரையாடும் போது "ஆணின் நிர்வாண உடல் ஒன்றும் நகைச்சுவை அல்ல" என்றார்.

ஜான் சீனா விருது அறிவித்த பின்னர் விழா பணியாளர்கள் அவருக்கு ஒரு துணியை சுற்றிவிட்டனர்.

ஆஸ்கர் நிகழ்ச்சியில் ஆடை இல்லாமல் தோன்றிய ஜான் சீனா!
Oscars 2022 : நகைச்சுவை நடிகரை தாக்கிய வில் ஸ்மித், என்ன நடந்தது ஆஸ்கர் மேடையில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com