நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை புகைப்படம் எடுத்த ஜோசப் ரத்திக் - யார் இவர்?
நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.
இந்த அழகிய புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞராக வலம் வருபவர் ஜோசப் ரத்திக்.
புகைப்படக் கலைஞர் ஜோசப் ரத்திக்
ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜோசப், இன்ஜினியர் பட்டதாரி. பின்னர் MBA படித்து முடித்துவிட்டு மகாராஷ்டிராவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தனது தங்கையின் திருமணத்தின் போது தான் ஏன் ஒரு புகைப்பட கலைஞராக பணிபுரியக் கூடாது என்று யோசித்து உள்ளார்.
இதற்காகக் கடந்த 2010ஆம் ஆண்டு இருந்து முழுநேர புகைப்பட கலைஞராக ஜோசப் உருவெடுத்தார்.
நம்மில் பலர் புகைப்படம் எடுப்பது ஒரு சீசனில் மட்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது இந்தியாவுக்கு இல்லை என்று எண்ணிய ஜோசப், Flickr என்ற புகைப்படம் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் மூலம் பிரபலமானார்.
இதன் பின்னர், திரை பிரபலங்களுக்குப் புகைப்படம் எடுக்கும் பிரபல புகைப்பட கலைஞராக ஜோசப் உருவெடுத்தார். ஒரு நாளுக்கு புகைப்படம் எடுக்க ரூ.1.5 லட்சத்தில் இருந்து பணம் வாங்குவாரம்.
சாதனை
சர்வதேச புகைப்பட விருதுகள் (2015)
சோனி கலைக் கலைஞர்கள், இந்தியா (2021)
GQ 50 மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர் (2021)
திரை பிரபலங்களுக்குப் புகைப்படக் கலைஞராக ஜோசப்
அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி
காஜல் அகர்வால் - கௌதம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust