Kajal Aggarwal - Gautam
Kajal Aggarwal - GautamTwitter

காஜல் - கவுதம் : மகனுக்குப் பெயர் சூட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய Celebrity Couple

நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
Published on

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சிலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டார் என்று எண்ணிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.

கர்ப்பமான பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகை காஜல், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

Kajal Aggarwal - Gautam
Kajal Aggarwal - Gautamtwitter

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தி வெளியானதும் சமூக வலைதளங்களில் நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்தன

நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கவுதம் கிச்சிலு, தனது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். அதன்படி அந்த குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நீல் என்றால் சாம்பியன் என்று அர்த்தமாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Kajal Aggarwal - Gautam
நடிகர் விமல் மீது ரூ.5 கோடி பண மோசடி புகார்
logo
Newssense
newssense.vikatan.com