லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் விக்ரம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. ஹீரொவாக உலக நாயகன் கமல், அவருடன் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூர்யா எனப் பல பெரியத் தலைகள் இந்த படத்தில் உள்ளன. இது அடுத்த மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது மற்றுமொரு தகவல், கமல் ரசிகர்களைக் குதூகலமாக்கியுள்ளது.
கன்னட நடிகர் யஷ்ஷை வைத்து கே ஜி எஃப் 1 மற்றும் 2 படங்களை இயக்கி, உலகப் புகழ் பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கமல் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதில் ஹீரோவாக ஜூனியர் என் டி ஆர் நடிக்கவுள்ளார். இப்போது பிரசாந்த் நீல் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து எடுத்துவரும் சலார் படத்தின் வேலைகள் முடிந்ததும், இந்த படத்தை இயக்கவுள்ளார்.
ஏற்கனவே மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுளி இயக்கிவரும் படத்தில் நடிக்கக் கமலிடம் இயக்குநர் கேட்டிருந்த நிலையில், இது கமல் மற்றும் கே ஜி எஃப் ரசிகர்களுக்கு போனஸ் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. எனினும், படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரும்வரை காத்திருப்போம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp