"ஆசிட் வீச்சை நியாயப்படுத்துவதா?" - சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை வறுத்தெடுத்த கனிமொழி

இன்று படைப்பு அரங்கில் கனிமொழி கருணாநிதி, எழுத்து உலகில் பெண்களின் நிலைக் குறித்தும் பெண் சுதந்திரம் குறித்தும் உரையாடினார்.
"ஆசிட் வீச்சை நியாயப்படுத்துவதா?" - சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை வறுத்தெடுத்த கனிமொழி
"ஆசிட் வீச்சை நியாயப்படுத்துவதா?" - சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை வறுத்தெடுத்த கனிமொழிKanimozhi and Remo movie
Published on

சென்னையில் நடைபெற்று வரும் இலக்கிய திருவிழாவில் பலதரப்பட்ட கலை, இலக்கிய ஆளுமைகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலக்கியத் திருவிழாவில் எஸ். ராமகிருஷ்ணன், இமையம், கரன் கார்க்கி, தமிழ்ப்பிரபா,சு. தமிழ்ச்செல்வி, இளம்பிறை, மனுஷ்யபுத்திரன், கனிமொழி கருணாநிதி MP, ஜெ. ஜெயரஞ்சன், ஏ.எஸ். பன்னீர்செல்வன், ஆர். விஜயசங்கர், வெற்றிமாறன், மிஷ்கின், யுகபாரதி, கபிலன், கதை சொல்லி சதீஷ், தெருக்குரல் அறிவு, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன்,  தமிழ்பிரபா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாடினர்.

இன்று பேசிய கனிமொழி கருணாநிதி, எழுத்து உலகில் பெண்களின் நிலைக் குறித்தும் பெண் சுதந்திரம் குறித்தும் உரையாடினார்.

அவர் பேசியதாவது, "ஆண்டாள் முற்காலத்தில் எழுதிய விஷயங்களை தற்காலத்து பெண்கள் எழுதுவது சர்ச்சையை உருவாக்குகிறது.

பெண்கள் தன்னுடைய உடல் பற்றிய கவிதைகளை, தங்களுடைய தேவைகளைப் பற்றிய விஷயங்களை, தன் உடலை அவர் எப்படிப் பார்கிறார் என வெளிப்படையாக எழுதுவது சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

பெண்கள் அப்படி எழுதிய கவிதைகளை கொச்சையாக விமர்சிக்கும் ஆண் கவிஞர்களே அதை விட மோசமாக பெண்களை கொச்சைப்டுத்தி எழுதுகின்றனர்.

தொல்காப்பியத்திலிருந்தே பெண் என்பவள் தன்னைப் பற்றி தன்னுடையத் தேவைகளைப் பற்றி தன்னுடைய இச்சைகளைப் பற்றி பேசக்கூடாது என இந்த சமூகம் கூறிவருகிறது" எனப் பேசினார்.

"ஆசிட் வீச்சை நியாயப்படுத்துவதா?" - சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை வறுத்தெடுத்த கனிமொழி
போர், பெண்கள் : பழங்கால கிரீஸ் குறித்த அதிர வைக்கும் 30 உண்மைகள் - Wow Facts!

ரெமோ படமும் ஆசிட் வீச்சும்

மேலும் பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் குறித்துப் பேசிய கனிமொழி, "சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த திரைப்படத்தில் (ரெமோ) ஒரு பெண் மீது ஆசிட் வீசிய ஆண் அதனை அன்பால், அளவுக்கு அதிகமான பொசசிவ்னெஸ் காரணமாக செய்ததாக கூறியிருப்பர்.

ஏன் தன்னை அன்பு செய்யும் ஒருவனை மறுப்பதற்கான உரிமை பெண்களுக்கு கிடையாதா? தன்னை அன்பு செய்யும் அனைவரையும் அன்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெண் இருக்கிறாள்.

ஆசிட் வீச்சைக் கூட நியாயப்படுத்தக்கூடிய திரைப்படங்கள் வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்." எனப் பேசினார்.

"ஆசிட் வீச்சை நியாயப்படுத்துவதா?" - சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை வறுத்தெடுத்த கனிமொழி
கனிமொழி : 'குழந்தைகளை கூட வஞ்சித்துவிட்டீர்கள் மோடி' - நாடாளுமன்றத்தில் அனல் பறந்த பேச்சு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com