"உனக்கே உயிரானேன்..." கண்ணதாசன் பாடல்கள் - Best Songs of kannadasan

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து பத்திரிக்கைகளில் பணியாற்றி சினிமாவில் வளர்ந்து தமிழகத்தின் "கவியரசாக" உயர்ந்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் யாரோ ஒருவரின் உயிருக்கு நெருக்கமாக இருக்கும். அதிலிருந்து சில பாடல்களை இங்கு தொகுத்துள்ளோம்.
கண்ணதாசன்
கண்ணதாசன்Newssense

உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி

கண்ணே கலைமானே...

உண்மையைச்
சொல்லி நன்மையைச்
செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்

நிலை உயரும்
போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை
வணங்கும்

மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்...

ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி

நாளை பொழுதை
இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு

உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

அமைதி இல்லாத
நேரத்திலே அந்த ஆண்டவன்
என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்தே நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன்
தூது விட்டான்

நிலவே என்னிடம்
நெருங்காதே நீ நினைக்கும்
இடத்தில் நானில்லை

என் இதயத்தில்
பூட்டிவைத்தேன் அதில்
என்னையே காவல்
வைத்தேன் அவள்
கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

அவள் பறந்து
போனாளே என்னை
மறந்து போனாளே...

போனால் போகட்டும் போடா

எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதற்கொரு
மருந்தைக் கண்டேனா

இருந்தால்
அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா

நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

கண்ணதாசன்
இளையராஜா : நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டிய 10 பாடல்கள் | Playlist

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com