நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பரிமாறப்பட்ட காதல் பிரியாணி - சமைப்பது எப்படி?

பன்னீர் பட்டாணி, பருப்பு என நாம் கேள்விப்பட்ட உணவுகள் இடம்பெற்றன ஆனால் மெனுவில் புதிதாக kathal biryani என்று இடம்பெற்றிருந்தது. அதாவது பலாப்பழத்தினால் செய்யப்படும் இதனைக் கத்தல் பிரியாணி என்றும் அழைப்பார்களாம்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பரிமாறப்பட்ட காதல் பிரியாணி
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பரிமாறப்பட்ட காதல் பிரியாணிNewsSense
Published on

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் வழங்கப்பட்ட உணவுகளின் பட்டியல் விவரம் வெளியானது.

அதில் பன்னீர் பட்டாணி, பருப்பு என நாம் கேள்விப்பட்ட உணவுகள் இடம்பெற்றன ஆனால் மெனுவில் புதிதாக kathal biryani என்று இடம்பெற்றிருந்தது. அதாவது பலாப்பழத்தினால் செய்யப்படும் இதனைக் கத்தல் பிரியாணி என்றும் அழைப்பார்களாம்.

அந்த பிரியாணி குறித்த மோகம் தற்போது அதிகமாகியுள்ளது. அதனை எப்படி சமைப்பது என்றெல்லாம் கூகுளில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

kathal biryani எப்படிச் செய்வது என்று கீழே காணலாம்,

தேவையான பொருட்கள்

  • பலாச்சுளைகள் - 250 கிராம்

  • பலாக்காய் - 150 கிராம்

  • பட்டை - 1

  • கிராம்பு - 3

  • ஏலக்காய் - 2

  • உப்பு - சிறிதளவு

  • தயிர் - 50 மில்லி

  • இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்

  • பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

  • மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

  • வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்)

  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு

  • புதினா இலை - சிறிதளவு

  • பாஸ்மதி அரிசி - 1 கிலோ

kathal biryani
kathal biryaniTwitter

அரைக்க

கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு

புதினா இலை - 1 கட்டு

பச்சை மிளகாய் - 2

மிளகு - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - கால் மூடி

தாளிக்க

நெய் - 100 மில்லி

சீரகம் - சிறிதளவு

சோம்பு - சிறிதளவு

kathal biryani
kathal biryaniTwitter

kathal biryani செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி உப்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து சூடானதும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, முக்கால் வேக்காடு வெந்ததும், வடித்து ஆற விடவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும்.

பலாச்சுளைகளைப் பொடியாகவும், பலாக்காயை நீளமாகவும் நறுக்கி வைக்கவும்.

அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்துத் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும், பலாக்காயைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

kathal biryani
kathal biryaniTwitter

இதில் மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விடவும். கலவை நல்ல வாசனை வரும் போது தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

சிறிது நேரம் கழித்து வடித்த அரிசியை அரை பங்கு கலவையில் சேர்க்கவும். இதன் மேல் வெங்காயம், பலாப்பழம், கொத்தமல்லித்தழை, புதினா இலை தூவவும். மஞ்சள்தூளை சிறிது தண்ணீரில் கரைத்து, பிரியாணியின் மேல் தெளித்து விடவும்.

பாத்திரத்தை அலுமினிய ஃபாயிலால் மூடி சிறு தீயில் தம்மில் 25 நிமிடங்கள் வைக்கவும்.

சுவையான காதல் பிரியாணி ரெடி!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் பரிமாறப்பட்ட காதல் பிரியாணி
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் : பரிமாறப்பட்ட காதல் பிரியாணி முதல் காளான் வறுவல் வரை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com