2003 ஆம் ஆண்டு வெளியான பக்கா சுக்கா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் மோகன் ஜுனேஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெவ்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டதட்ட 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மோகன், கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்திருந்தார். ராக்கி பாய் பற்றியும், கேஜிஎஃப் பற்றியும் பத்திரிக்கையாளரிடம் விளக்கமாக கூறும் ஏரியாவாசியாக நடித்திருந்தார். ‘கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்' என அவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது.
54 வயதான மோகன் ஜுனேஜா நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கல்லீரல் தொடர்பான பிரச்னைக்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். மோகனின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu