தொழிலதிபர் சரவணன் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
திரையரங்குகளில் 4 மணி ஷோக்கள் கிடைத்த படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
ஜேடி - ஜெர்ரி எனும் விளம்பர பட இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
மறைந்த நடிகர் விவேக், ரோபோ சங்கர், நாசர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தாலா இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தார்.
படத்தின் நாயகி ஊர்வசிக்கு 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதனை படக்குழுவும் ஊர்வசி தரப்பும் மறுத்துள்ளனர்.
ஏற்கெனவே ஒரு படத்துக்கு 6 கோடி சம்பளம் வாங்கினார் ஊர்வசி என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. இதனால் அவர் 10 கோடி வரை சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
உறுதியாக சம்பளம் விவரம் வெளியிடப்படவில்லை என்றாலும் பெரிய தொகை அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதை நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது என முன்னரே செய்திகள் வந்திருந்தது.
படத்துக்கு 45 கோடி வரை செலவழித்திருக்கலாம் என்றும் 65 கோடி வசூலித்தால் இது ஒரு வெற்றிப்படமாக கருதப்படும் என்றும் திரைப்பட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த படம் முதல் நாளில் மட்டும் 2 கோடி வசூலித்தாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. 4 நாட்கள் வசூல் 6 கோடி என்றும் கூறுகின்றனர்.
லெஜண்ட் திரைப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவானது. இதை அடுத்து அவர் சர்வதேச அளவில் அடுத்தப்படத்தை உருவாக்குவதாக சமீபத்தில் பேசியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust