Leo : ஜெயிலர் படத்தை மிஞ்சிய லியோ - முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதுவும் ரஜினியின் ஜெயிலர் பட வசூலை லியோ படத்துடன் ஒப்பிட்டு கருத்துகள் தெரிவித்து வந்தனர்.
Leo
LeoTwitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் 30 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருப்பதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் லியோ படம் வெளியானது. லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என பலர் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 900திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது.

படத்தின் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அதுவும் ரஜினியின் ஜெயிலர் பட வசூலை லியோ படத்துடன் ஒப்பிட்டு கருத்துகள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் லியோ திரைப்படம் தமிழகத்தில் சுமார் 30 கோடி வசூலை தாண்டியுள்ளது. அதேபோல் லியோ திரைப்படம் உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் ஜெயிலர் முதல் நாள் வசூலில் 25 கோடி வசூல் செய்திருந்தது. அந்த சாதனையை லியோ திரைப்படம் முறியடித்திருக்கிறது.

இப்படம் தமிழகத்தில் சுமார் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.12.50 கோடியும், கர்நாடகாவில் ரூ.14.50 கோடியும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.17 கோடியும் வசூல் செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளம் கூறுகிறது.

Leo
LEO (No Spoilers): LCU என்பது என்ன? விஜய் எப்படி அதில் இடம் பிடிக்கிறார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com