Vijay: Leo பட பாடலில் புகைப்பிடிக்கும் விஜய் - போலீசில் கொடுக்கப்பட்ட புகார் என்ன?
Vijay: Leo பட பாடலில் புகைப்பிடிக்கும் விஜய் - போலீசில் கொடுக்கப்பட்ட புகார் என்ன?ட்விட்டர்

Vijay: Leo பட பாடலில் புகைப்பிடிக்கும் விஜய் - போலீசில் கொடுக்கப்பட்ட புகார் என்ன?

நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published on

லியோ படத்தின் முதல் பாடலான "ஆல்டர் ஈகோ நான் ரெடி" பாடல் கடந்த 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் 28 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அசல் கோளாரும் 'ராப்' செய்திருக்கிறார்.

இந்த பாடலின் முதல் புகைப்படம் போதே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

LEO
LEOTwitter

லிரிக்கல் வீடியோவில் கிட்டத்தட்ட அனைத்து ஃப்ரேமிலுமே விஜய் வாயில் சிகரெட்டுடன் தோன்றினார்.

இந்த நிலையில், லியோபடத்தின் ’நா ரெடி தான் வரவா’பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இருப்பதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vijay: Leo பட பாடலில் புகைப்பிடிக்கும் விஜய் - போலீசில் கொடுக்கப்பட்ட புகார் என்ன?
LEO: ஃபர்ஸ்ட் லுக்கில் இந்த விஷயங்களை கவனித்தீர்களா? விஜயின் லுக் சொல்லும் விஷயங்கள் என்ன?

லியோ திரைப்படம் செவன் ஸ்கிரீன் புரோடக்‌ஷன்ஸ் லலித் குமாரால் தயாரிக்கப்படுகிறது. கைதி, விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இறுதி கட்ட படப்பிடிப்புகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay: Leo பட பாடலில் புகைப்பிடிக்கும் விஜய் - போலீசில் கொடுக்கப்பட்ட புகார் என்ன?
LEO : தளபதி விஜய் கடந்து வந்த 7 முக்கிய சர்ச்சைகள் - விரிவான தகவல்கள்| HBD Vijay

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com