Leo : “லோகேஷ் நெற்றியில் நான் முத்தமிட்டேன்” - சென்னை திரும்பிய மிஷ்கின் நெகிழ்ச்சி

லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிவிட்டேன் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
Mysskin wraps up shoot, says 'happy to have worked with Vijay and Lokesh Kanagaraj'
Mysskin wraps up shoot, says 'happy to have worked with Vijay and Lokesh Kanagaraj'Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதமேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என லியோ படத்தில் நடித்த இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் என்றும் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர் என்றும் சண்டை பயிற்சியாளர் அன்பறிவு மிகச்சிறந்த ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள் என பாராட்டினார்.

மேலும் உதவி இயக்குநர்களில் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது என நெகிழ்ந்த மிஷ்கின், படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார் என பாராட்டு தெரிவித்தார்.

Mysskin wraps up shoot, says 'happy to have worked with Vijay and Lokesh Kanagaraj'
Lokesh Kanagaraj:"என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்" லோகேஷ் உருக்கம்

லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்று இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயக்கிக் கொண்டிருந்தான், என் கடைசி காட்சி முடித்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இப்படத்தில் பணியாற்றுவதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Mysskin wraps up shoot, says 'happy to have worked with Vijay and Lokesh Kanagaraj'
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com