லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா? அடுத்த படத்தில் ரஜினியா?

விஜய் அரசியல் குறித்து, "எல்லாரையும் சார்னு கூப்புடுற நான் அண்ணான்னு அழைக்கிற அளவு அவர் நல்லவர். யாருக்கும் தெரியாம நாம நினைக்கிறத விட அதிக நல்லது செஞ்சியிருக்கார்." என்றார் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா?
லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா?Twitter

இந்திய சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது விஜயின் லியோ படத்தை இயக்கி வருவதாலும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வருவதாலும் மிகவும் முக்கியமான இயக்குநராக திகழ்கிறார் லோகேஷ்.

கோவையில் தனியார் கல்லாரியின் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம்  மாணவர்களும், ஊடகத்தினரும் பல்வேறு கேள்விகளைக்  கேட்டனர். 

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்த லோகேஷ், அக்டோபர் 19ம் தேதி லியோ பட வெளியீட்டை உறுதி செய்தார்.

அஜித் நடிப்பில் படம் இயக்க விருப்பம் என்று தெரிவித்தார். அவரது அடுத்த படம் ரஜினிகாந்த் நடிப்பிலா எனக் கேட்கப்பட்ட போது, "புரடக்‌ஷன்ல இருந்துதான் சொல்லணும். என்னால எதும் சொல்ல முடியாது" எனக் கூறிவிட்டார்.

எல்லா நடிகர்களுடனும் பணியாற்ற விருப்பம் இருக்கிறது எனத் தெரிவித்தவர், 10 படங்கள் மட்டுமே தான் இயக்கப்போவதாகவும் 10வது படத்துடன் ரிடையர் ஆகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

யாருடன் வேலை செய்தது ஈஸி, கமலா? விஜயா? என பத்திரிகையாளர் கேட்டபோது, ஸ்ரீ கூட என தக் லைஃப் பதிலளித்தார் லோகேஷ்.

விஜயின் அரசியல் குறித்து கேட்கப்பட்டபோது, தனக்கு அரசியல் அறிவு குறைவு எனவே பேச விரும்பவில்லை. எல்லாரையும் சார்னு கூப்புடுற நான் அண்ணான்னு அழைக்கிற அளவு அவர் நல்லவர். யாருக்கும் தெரியாம நாம நினைக்கிறத விட அதிக நல்லது செஞ்சியிருக்கார்.

லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா?
"விஜய் அண்ணா பயிலரங்கம் தொடங்கியிருப்பது போதாது" - என்ன பேசினார் கார்த்தி?

அவரது ட்ரீம் ப்ராஜெக்ட் பற்றி கேட்டதற்கு ‘இரும்புக் கை மாயாவி’ நான் 10 வருடமாக எழுதிய கதை. அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் என்றிருக்கிறார்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச் பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறியவர், முடிந்தால் விஜயை கோவைக்கு அழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா?
Lokesh Kanagaraj:"என் மனைவி வேலைக்கு சென்றதால் தான் சினிமாவில் ஜெயித்தேன்" லோகேஷ் உருக்கம்

கோவையைப் பற்றி பேசிய அவர் கோவையில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான சினிமா வாய்ப்புகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் 5வது படம் லியோ. இதன் பிறகு ஒரு படத்தை இயக்கிவிட்டு, கைதி 2 இயக்குவதாகவும் கூறியிருக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் Dream Project! - 'LEO'ஆயிரம் கோடி வசூலிக்குமா?
LCU : லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்பது என்ன? அங்கு என்னென்ன நடக்கும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com