பாடலாசிரியர் கபிலன் உடைய மகள் தூரிகை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடலாசிரியர் கபிலனின் மகளும், எழுத்தாளருமான தூரிகை பெண்களுக்கான 'BeingWomen' என்ற பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையைத் தொடங்கினார். இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டனர்.
அந்த நிகழ்வில் தூரிகை," நான் தனிப்பட்ட முறையில் முன்னணி பத்திரிகை ஒன்றில் எழுதிக் கொண்டிருந்தேன். அதே சமயம் தனிப்பட்ட வலைப்பதிவிற்கும் எழுதிக் கொண்டிருந்தேன். பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையைத் தொடங்கினேன். ஆனால் இது பெண்ணியம் பற்றி பேசுவதற்காக தொடங்கப்பட்டது அல்ல. பெண்களுக்கு எதிராக நடக்கும் எதிர்மறை பக்கங்களை பெறுவதற்காகவும் அல்ல. பெண்கள் குறித்த அவர்களுடைய நேர்மறையான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன்.
பெண்கள் என்று வரும் பொழுது அழகு சார்ந்த விஷயங்களும் கூடவே வரும். ஒப்பனை செய்து கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஆனால், மாடல் துறையில் இருக்கும் பெண்கள் மற்றும் சினிமாத் துறையில் இருக்கும் பெண்கள் தான் ஒப்பனை செய்துக் கொள்ள முடியும் என்று பெண்கள் நினைப்பது முற்றிலும் தவறு. அதைக் கூறுவதற்கு தான் நாங்கள் எங்கள் பத்திரிகை வெளியிடும் போது அட்டை படத்திற்காகவே பிரத்யேகமாக புகைப்பட படப்பிடிப்பு நடத்தினோம். பெரும்பாலானோர், பெண்களின் நேர்மறைகளை விட எதிர்மறையான விஷயங்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். உதாரணத்திற்கு மாணவி அனிதாவின் தற்கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை போன்று எதிர்மறையான விஷயங்கள்.
இதை உடைப்பதற்காகவும், பெண் சமுதாயத்தை அழகாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களைப் பற்றிய நேர்மறைகளைக் கொத்து கொத்தாக கொடுக்க போகிறேன்." என்று பேசி இருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust