மாமன்னன் : ட்விட்டரில் பாசிட்டிவ் விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா?

சமூகவலைதளங்களில் காலை முதலே மாமன்னன் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை வந்தன. இந்த நிலையில் இவ்வாறு ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 திமுக சார்பில் அனுப்பப்படுவதாக ஒரு அனல் பறக்கும் விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.
மாமன்னன்: ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா?
மாமன்னன்: ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா? Twitter
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன்.

அரசியல்-த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் லால், கீதா கைலாசம், ரவீனா ரவி, விஜய குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்யக் கோரி வழக்கு தொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வெளியாகியிருக்கும் மாமன்னன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூகவலைதளங்களில் காலை முதலே மாமன்னன் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை வந்தன.

இந்த நிலையில் இவ்வாறு ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 திமுக சார்பில் அனுப்பப்படுவதாக ஒரு அனல் பறக்கும் விவாதமே நடந்துகொண்டிருக்கிறது.

மாமன்னன்: ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா?
தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

படம் பார்த்துவிட்டு ட்விட்டர்வாசிகள் எதிர்பார்த்ததை விட படம் சிறப்பாக இருக்கிறது என்று பதிவிட்டு வந்தனர். அதற்கு கீழே கமெண்டில் இன்னைக்கு திமுவிற்கு இதான் டாஸ்க் போல, பெறப்பட்ட Paytm ரூபாய் 200 என்று பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இவ்வாறு பதிவிட்டு வந்ததால், Paytm customer care தனது ட்விட்டர் பக்கத்தில்

"உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உங்கள் தொடர்பு எண்ணை DM மூலம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், மேலும் Paytm வாடிக்கையாளர் ஆதரவில் நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்" என்று பதிவிட்டுள்ளது. இந்த ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமன்னன்: ட்விட்டரில் நல்ல விமர்சனம் பதிவிடுவதற்கு Paytmல் ரூ.200 கிரெடிட் ஆகிறதா?
7ஆம் அறிவு படத்தில் வந்த Reservation வசனம்; நீக்கச் சொன்ன சூர்யா, மறுத்த உதயநிதி - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com