Mallipoo : வெந்து தணிந்தது காடு சிம்புவின் துள்ளலுடன் வெளியானது வீடியோ சாங்!

துள்ளலான இசையுடன் புலம் பெயர் தொழிலாளர்களின் இல்லறத் துயரங்களைப் பேசிய பாடலாக உருவாகியிருந்தது மல்லிப்பூ. கவிஞர் தாமரையின் வரிகள் பாடலுக்கு உயிரூட்டியது என்றே கூறலாம்.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி வெளியானது சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம். ஜெயமோகன் கதையுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது.

படத்தின் தயாரிப்பாளர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குநர் மற்றும் நடிகருக்கு ராயல் என்ஃபில்ட் பைக் மற்றும் டொயோட்டா காரினைப் பரிசாக வழங்கினார்.

படத்தில் சிம்புவின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதற்கு இணையாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் கவனம் ஈர்த்தது.

முதலில் காலத்துக்கும் நீ வேணும் பாடல் காதில் தேன் பாய்ச்சியது. மறக்குமா நெஞ்சம், உன்ன நினச்சு தான் பாடல்களும் ஹிட் அடித்தன.

மிகக் குறிப்பாக மல்லிப்பூ பாடல் அதிக அளவில் கவனிக்கப்பட்டது. துள்ளலான இசையுடன் புலம் பெயர் தொழிலாளர்களின் இல்லறத் துயரங்களைப் பேசிய பாடலாக உருவாகியிருந்தது. கவிஞர் தாமரையின் வரிகள் பாடலுக்கு உயிரூட்டியது என்றே கூறலாம்.

மல்லிப்பூ பாடலின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ சாங் தற்போது வெளியாகியிருக்கிறது.

logo
Newssense
newssense.vikatan.com