Fahadh Faasil: "உங்கள் இரண்டு கண்களும் அவ்வளவு பிடிக்கும்" மாரி செல்வராஜின் வாழ்த்து!

இன்று ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஃபஹத்தின் கண்கள் பற்றியும், அம்பேத்கர் வார்த்தைகளைப் பற்றியும் பேசியுள்ளார்.
Fahadh Faasil: "உங்கள் இரண்டு கண்களும் அவ்வளவு பிடிக்கும்" மாரி செல்வராஜின் வாழ்த்து!
Fahadh Faasil: "உங்கள் இரண்டு கண்களும் அவ்வளவு பிடிக்கும்" மாரி செல்வராஜின் வாழ்த்து!Mari Selvaraj Facebook
Published on

மலையாள திரைப்பட நடிகர் ஃபஹத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களை நடித்துள்ளார்.

கடைசியாக இவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஃபஹத்தின் ரத்தினவேல் கதாப்பாத்திரம் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசப்பட்டாலும் நடிப்பில் மிரட்டியிருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஃபஹத்தின் கண்கள் பற்றியும், அம்பேத்கர் வார்த்தைகளைப் பற்றியும் பேசியுள்ளார்.

"வணக்கம் பகத் சார்!!!" என தனது வாழ்த்துகளை தொடங்கியிருந்தார் மாரிசெல்வராஜ்.

"உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்" என தனது உருக்கமான வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

ஃபஹத் ஃபாசில்

ஃபஹத் 2014ல் நஸ்ரியாவைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் முதலில் நஸ்ரியாவின் கணவராகவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

பெங்களூரு டேஸ் படத்திலும் நஸ்ரியாவின் கணவராகவே நடித்திருப்பார். மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் உட்பட 50 படங்கள் நடித்திருக்கிறார்.

இவரது மலையாளப்படங்கள் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த ஆண்டு வெளியான பச்சுவும் அத்புத விளக்கும் என்ற மலையாள படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

Fahadh Faasil: "உங்கள் இரண்டு கண்களும் அவ்வளவு பிடிக்கும்" மாரி செல்வராஜின் வாழ்த்து!
Fahadh Faasil: 15 Movies of 'Amar' you would never want to miss! |Visual Story

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com