Merry Christmas: வில்லன் பாத்திரங்களில் நடிப்பது ஏன்? விஜய் சேதுபதி சொன்ன அசத்தல் பதில்!
Merry Christmas: வில்லன் பாத்திரங்களில் நடிப்பது ஏன்? விஜய் சேதுபதி சொன்ன அசத்தல் பதில்!Twitter

Merry Christmas: வில்லன் பாத்திரங்களில் நடிப்பது ஏன்? விஜய் சேதுபதி சொன்ன அசத்தல் பதில்!

மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை புரொமோட் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி சமீபத்தில் அதிகமாக வில்லன் பாத்திரங்களில் நடிப்பது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
Published on

கத்ரினா கைஃபுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வரும் 12ம் தேதி ரிலீஸாகவுள்ள அந்த படத்துக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை புரொமோட் செய்யும் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி சமீபத்தில் அதிகமாக வில்லன் பாத்திரங்களில் நடிப்பது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "என்னால் வாழ்க்கையில் யாரையும் கொல்லவோ டார்சர் செய்யவோ முடியாது. வில்லன் பாத்திரம் செய்யும் போது அந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறது.

வாழ்க்கையில் கோபமோ ஈகோவோ இருந்தாலும் நாம் அவற்றை வெளிப்படுத்த முடியாது. அடக்கமாக இருக்க வேண்டும். படங்களில் நாம் கொடூரமால சிரிக்கலாம், பிறர் உணர்ச்சிகளுடன் விளையாடலாம்." என்றார் விஜய் சேதுபதி.

logo
Newssense
newssense.vikatan.com