Jailer: ”ரஜினி ஒரு மிகப் பெரிய நடிகர்” ஜெயிலர் குறித்து முன்னாள் மங்கோலிய அதிபர் பேச்சு

நான் ரஜினிகாந்த் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றிபெரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
Jailer: ”ரஜினி ஒரு மிகப் பெரிய நடிகர்” ஜெயிலர் குறித்து முன்னாள் மங்கோலிய அதிபர் பேச்சு
Jailer: ”ரஜினி ஒரு மிகப் பெரிய நடிகர்” ஜெயிலர் குறித்து முன்னாள் மங்கோலிய அதிபர் பேச்சுtwitter

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார் மங்கோலிய நாட்டின் முன்னாள் அதிபரான நம்பரின் என்க்பயார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். 2021ல் வெளியான அண்ணாத்த படத்திற்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் படம் இதுவாகும்.

மேலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளின் முன்னணி நடிகர்களையும் இந்த படத்தில் ஒன்றிணைத்துள்ளார் இயக்குநர் நெல்சன்.

உலக நாடுகள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது ஜெயிலர். இந்நிலையில், திரைப்படம் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் பேசியிருக்கிறார் மங்கோலியாவின் முன்னாள் அதிபரான நம்பரின் என்க்பயார்.

அவர் கூறியதாவது,

“இந்திய திரைப்படங்கள் உலகளவில் மிகவும் பிரபலமானவை. மங்கோலியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மங்கோலியர்களுக்கு இந்திய திரைப்படங்கள் பிடிக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன் ஜெயிலர் வெளியாகியிருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.. இந்த திரைப்படத்தை பார்ப்பது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்று நான் நம்புகிறேன்.”

Jailer: ”ரஜினி ஒரு மிகப் பெரிய நடிகர்” ஜெயிலர் குறித்து முன்னாள் மங்கோலிய அதிபர் பேச்சு
Jailer : மிரட்டலாக வெளியான ரஜினியின் ஜெயிலர் டிரெய்லர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ் என்ன?

”ஏனென்றால், இந்த படத்தில் மிகப் பெரிய நடிகரான ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

எப்போது ரஜினிகாந்தை பற்றி கேள்விப்பட்டேன் என்று நினைவில் இல்லை. ஆனால், நான் ரஜினிகாந்த் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன்.

இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றிபெரும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்று கூறியுள்ளார் அதிபர்.

கடந்த வியாழன் அன்று படம் வெளியாகிய நிலையில், இன்று உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை கடக்கவிருக்கிறது. முண்ணூறு கோடி வசூலை தொடும் ரஜினிகாந்த்தின் நான்காவது திரைப்படம் இது.

இந்தியாவில் 150 கோடியை தொடவுள்ளது படத்தின் வசூல்.

Jailer: ”ரஜினி ஒரு மிகப் பெரிய நடிகர்” ஜெயிலர் குறித்து முன்னாள் மங்கோலிய அதிபர் பேச்சு
ஜெயிலர் : சென்னைக்கு FDFS பார்க்க வந்த ஜப்பான் ரசிகர் - ரஜினியை சந்தித்தது எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com