நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கிறது? - படம் பார்த்தவர்கள் சொல்வது இதுதான்!

ஆகஸ்ட் 29ம் தேதி பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் பிமியர் ஷோவாக அந்த காட்சி திரையிடப்பட்டது. படம் குறித்து அனுராக், "இது எனக்கு தனிப்பட்ட மற்றும் மிகவும் விருப்பமான படம்" என தனது இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.
நட்சத்திரம் நகர்கிறது
நட்சத்திரம் நகர்கிறதுTwitter
Published on

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. கலையரசன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் இந்த படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நட்சத்திரம் நகர்கிறது சிறப்புக்காட்சி ஒன்றை மும்பையில் திரையிட்டார் இயக்குநர் ரஞ்சித். அந்த காட்சியைப் பார்த்த இயக்குநர் அனுராக்கஷ்யப் மெய்சிலிர்த்து ரஞ்சித்தைப் பாராட்டியிருக்கிறார். அத்துடன் இன்ஸ்டாகிராமில் படம் குறித்த தனது கருத்துக்களையும் பதிவிட்டார். அதில் பா.ரஞ்சித், துஷாரா விஜயன் மற்றும் மொத்த படக் குழுவினரையும் பாராட்டினார் அனுராக்.

ஆகஸ்ட் 29ம் தேதி பிரபலங்கள் மட்டுமே பங்கேற்கும் பிமியர் ஷோவாக அந்த காட்சி திரையிடப்பட்டது. படம் குறித்து அனுராக், "இது எனக்கு தனிப்பட்ட மற்றும் மிகவும் விருப்பமான படம்" என தனது இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.

நட்சத்திரங்கள் நகர்கிறது குறித்து அனுராக்கஷ்யப்

"நேற்று நட்சத்திரங்கள் நகர்கிறது படத்தைப் பார்த்தேன். நான் பார்த்தது சென்ஸார் செய்யாத வெர்ஷன். இது ரஞ்சித்தின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படம். படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரஞ்சித்தின் பல அடையாளங்கள்.

இந்த ஒவ்வொரு அடையாளமும் ஒன்றுடன் ஒன்று உரையாடி கொண்டும், முரண்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. கருத்துகளை வெளிப்படுத்தி அவரவர்களை நிலைநிறுத்தக் கொள்ள முனைகின்றனர்.

இது காதலை பற்றியப்படம். அது எப்படி அனைத்து வெறுப்புகள், வேறுபாடு, பாரபட்சங்களைக் கடந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியது."

துஷாரா விஜயன் நடித்த ரெனே காதாப்பாத்திரம் பா.ரஞ்சித்தின் சிந்தனைகளை உள்வாங்கி படமாக்கப்பட்டுள்ளது என அனுராக் கூறுயுள்ளார்.

மேலும் அவர், இப்படத்தில் அனைத்து நடிகர்களும் அற்புதமாக பணியாற்றியிருந்தனர், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறது" என்று எழுதியுள்ளார்.

மேலும் சில Review-க்கள்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com