நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணம் முடிந்து 4 மாதத்தில் குழந்தை எப்படி பிறந்தது என பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம் வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொள்ள பல விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இரட்டை குழந்தை , விவாகரத்தில் விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல் வெளியகியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust