முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக் கான், ஏ.ஆர்.ரஹ்மான் என மிகப் பெரிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்வதாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனால் கல்யாணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளர்கள் கேமராக்கள் எல்லாம் வாசலிலேயே காத்திருந்தன.
திருமணத்தின் சில செலவுகளை ஏற்றுக்கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் பின்னர் அந்த ஒளிபரப்பு ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதாக செய்திகள் வெளியாகின.
நயன் - விக்கி திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்தும் திருமண நிகழ்வு ஒளிபரப்பு குறித்து எந்த அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிடவில்லை.
காலம் கடந்து வெளியிட்டால் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்பது நயந்தாரா தரப்பு வாதமாக இருந்திருக்கிறது.
ஒரு மாதம் கழித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் சில கல்யாண புகைப்படங்களை வெளியிட்டார். இது இரு தரப்புக்கும் இடையில் மனக் கசப்பை ஏற்படுத்தியது எனக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் பின் வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் செலவுகளைத் திருப்பிக் கேட்டு சட்டப்பூர்வமான அறிக்கை அளித்திருக்கிறது என செய்திகள் வந்திருந்தன.
ஆனால் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக விரைவில் ஒளிபரப்பு ஆரம்பமாகும் என நெட்ஃப்ளிக்ஸ் கூறியுள்ளது. மேலும் நயன்தாராவின் 20 வருட சினிமா பயணத்தையும் அடுத்தடுத்த சீசன்களில் வெளியிடப்போவதாகவும் அந்நிறுவன அதிகாரி டான்யா பாமி தெரிவித்துள்ளார்
இந்த திருமண ஆவணப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust