BharathiKannamma
BharathiKannammatwitter

பாரதி கண்ணம்மாவில் புதிய வில்லி.. பாரதியின் மன மாற்றம்! 

கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைகள் குறித்து பாரதிக்கு உண்மை தெரியவந்தால் சீரியல் முடிந்து விடும் என்று பார்த்தால், புதிதாக ஒரு வில்லியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
Published on

பாரதி கண்ணம்மா சீரியலில் நீண்ட நாட்களாக டி.என்.ஏ டெஸ்ட் விஷயம் வைத்து இழுவையாக கதையை நகர்த்தி வருகின்றனர். இனி வரும் அடுத்த வார எபிசோடுகளில் பாரதிக்கு லட்சுமி தன் மகள் தான் என்பது தெரிய வருகிறது.

பாரதி - கண்ணம்மா விவாகரத்து விஷயத்தில் வெண்பா தீவிரம் காட்டி வருகிறார். அவராகவே கோர்ட்டுக்கு சென்று பாரதியின் விவாகரத்து குறித்து  விசாரித்து விட்டு வருகிறார். அதை பாரதியிடம் சொல்கிறார். வெண்பாவின் செய்கையில் பாரதி கடுப்பாகிறார். ``என் விவாகரத்து  விஷயத்துல நீ ஏன் இவ்ளோ ஆர்வம் காட்டுகிறாய்’’ என்று திட்டுகிறார்.

BharathiKannamma
BharathiKannammatwitter

மற்றொரு புறம் ஹேமா பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க வீட்டில் உள்ள அனைவரிடமும் சம்மதம் கேட்கிறார். கண்ணம்மாவிடமும் தன் தந்தை பாரதியை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கெஞ்சுகிறார். கண்ணம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழிக்கிறார். 

ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களுக்கு கல்யாணம் செய்து  வைக்க இந்த பாப்பா முயற்சி பண்ணுதே. பாவம் யாராச்சும் இந்த ஆர்வக் கோளாறு பாப்பாவுக்கு சொல்லி புரிய வைங்க’’ என்று ரசிகர்களின் மனது கிடந்து தவிக்கிறது.

reka
rekatwitter

இந்த குழப்பங்கள் ஒருபுறம் இருக்க வெண்பாவை விட வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் இன்றைய எபிஸோடில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். 80ஸ் 90ஸ் இல் நடிப்பில் கொடிகட்டி பறந்த ரேகா, பாரதி கண்ணம்மாவில் வெண்பாவின் அம்மாவாக  இன்று எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தன் மகள் வெண்பாவுக்கும் பாரதிக்கும் கல்யாணம் செய்து வைக்கும் முடிவோடு பாரதியை சந்திக்கிறார். பாரதி எரிச்சலாகி கிளம்பிவிடுகிறார். இப்படியாக கதை நகர்கிறது. அடுத்த வார எபிசோடுகளில் பாரதி லட்சுமி தன் மகள் தான் என்பதை டி.என்.ஏ டெஸ்ட் மூலம் தெரிந்து கொள்கிறார் என்று விஜய் டிவி வட்டாரம் கிசுகிசுக்கிறது.  கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைகள் குறித்து பாரதிக்கு உண்மை தெரியவந்தால் சீரியல் முடிந்து விடும் என்று பார்த்தால், புதிதாக ஒரு வில்லியை அறிமுகப்படுத்தி சீரியலை இழுவை ஆக்கி விட்டனர்!

logo
Newssense
newssense.vikatan.com