
விஜய்யின் லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை 4 மணிக்கு திரையிட அனுமதி கோரி போடப்பட்டிருந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
படத்தினை 4 மணிக்கு காட்சிப்படுத்த அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் லியோ.
வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது லியோ திரைப்படம். இந்நிலையில், லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என படக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பினை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், லியோ படத்தை 4 மணிக்கு திரையிட அனுமதி வழங்கக் கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதல் காட்சியை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி வழங்க கோரி, தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு மனு வழங்கவும், அந்த மனுவினை அரசு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”படத்தின் நீளம், இடைவெளி ரசிகர்களின் வருகை அனைத்தையும் சேர்த்தால் ஒரு காட்சிக்கு எடுக்கும் நேரம் 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகிறது.
ஐந்து காட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 16 மணி நேரம் 30 நிமிடம். ஆனால், 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில், 5 காட்சிகள் திரையிடப்பட்டால், 18 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகிறது”
இவை அனைத்தும் கருத்தில் கொண்டு 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதி கேட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதாடப்பட்டது.
இதற்கு முன்னர் துணிவு படத்தின் 4 மணி சிறப்பு காட்சியின்போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், எந்த திரைப்படத்திற்கும் 4 மணி முதல் காட்சிக்கு அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
லியோ திரைப்படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
ஆனால், அந்த அரசாணை வந்த மறுநாளில் முதல் காட்சியை 9 மணிக்கு தொடங்கி, 5 காட்சிகள் விகிதம் நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசி காட்சி போட உத்தரவிடப்பட்டது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என மொத்தம் 6 நாட்களுக்கு, 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மட்டுமே அனுமதி என கூறப்பட்டிருந்தது. அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதி எனவும் கூறப்பட்டிருந்தது.
இதன் பின்னரே 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டது.
ரசிகர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை எனவும், 7 மணி காட்சி திரையிட அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் புதுச்சேரியில் 7 மணி காட்சிக்கு அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust