Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான படங்கள் விமர்சனரீதியாக இன்றும் பாராட்டப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் கௌரவிக்கத் தவறிய இந்திய படங்கள் பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்
Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்Twitter

நூற்றாண்டு கால வரலாறு உடைய இந்திய சினிமா இப்போதுதான் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற தொடங்கியிருப்பதாக தெரிகிறது.

ஆனால் நம் சினிமா வரலாற்றில் பல உன்னதமான படைப்புகளை நாம் உருவாக்கியிருக்கிறோம். பல மொழிகளில் பல கலாச்சாரங்களைப் பேசும் படங்கள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன.

வண்ணமயமான காட்சிகள், அதிரடி, மெலோடிராமா மற்றும் நடனம் ஆகியவற்றுக்காக சர்வதேச அரங்கில் கவனிக்கப்படுகிறது இந்திய சினிமா.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான படங்கள் விமர்சனரீதியாக இன்றும் பாராட்டப்பட்டு வருகின்றன.

இந்த படங்கள் ஆஸ்கர் விருது பெற பூரணமான தகுதிகொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட விதத்தில் இந்திய கலைஞர்கள் மற்றும் இந்தியர்களை உள்ளடக்கிய தயாரிப்புகள் ஆஸ்கர் வாங்கியிருந்தாலும், எந்த இந்திய படமும் முழுமையாக ஆஸ்கரை அலங்கரிக்கவில்லை.

ஆஸ்கர் கௌரவிக்கத் தவறிய இந்திய படங்கள் பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

Pather Panchali - பதோர் பாஞ்சாலி (1955)

இந்திய சினிமாவை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த பெங்காலி படத்தையேச் சேரும். இதனை உருவாக்கியவர் சத்யஜித் ரே.

ஒரு இந்திய கிராமத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்தவே சிரமப்படும் அபு என்ற சிறுவனின் கதையைப் பேசியது இந்த படம்.

28வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படமாக நாமினேட் செய்யப்பட்டது பதோர் பாஞ்சாலி. ஆனால் வெற்றி பெறவில்லை.

Mother India - மதர் இந்தியா (1957)

மெஹ்பூப் கான் இயக்கிய மதர் இந்தியா தலை சிறந்த படமாக கருதப்படுகிறது.

ஒரு பெண் தனது கணவரால் கைவிடப்பட்ட பின்னர் தனது குழந்தைகளை வளர்க்கவும், நிலத்தில் விவசாயம் செய்யவும் என்னென்ன சிரமங்களை அனுபவிக்கிறார் என்பதைப் பேசியது இந்த திரைப்படம்.

30வது ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படமாக மதர் இந்தியா நாமினேட் செய்யப்பட்டது. ஆனால் நைட்ஸ் ஆஃப் கபிரியா என்ற படம் அந்த ஆண்டு வெற்றி பெற்றது.

Salaam Bombay! - சலாம் பாம்பே (1988)

வீட்டில் இருந்து ஓடி மும்பையின் தெருக்களில் தஞ்சம் புகுந்த சிறுவனின் கதையை படமாக்கினார் மீரா நாயர்.

61வது ஆஸ்கர் விடுதுகளில் நாமினேட் செய்யப்பட்ட இந்த படமும் வெற்றி பெறவில்லை.

Lagaan - லகான் (2001)

அஷுடோஷ் கொவாரிகர் என்பவர் இயக்கிய ஸ்போர்ட்ஸ் ட்ராமா திரைப்படம் லகான். இதில் அமீர்கான் நடித்திருந்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயர்களிடமிருந்து வரிவிலக்கு பெற கிரிக்கெட் சாவால் விடும் இந்திய கிராமப்புற மக்களின் கதைதான் லகான்.

74வது அகாடமி விருதுகளில் நாமினேட் செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டது இந்த திரைப்படம்.

Devdas - தேவாஸ் (2002)

தேவாஸ் என்ற பெயரில் வெளியாகியிருந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு சஞ்சய் லீலா பாண்சலி இயக்கிய திரைப்ப்டம்.

இந்த படத்தில் கேமரா வேலைகளும், சாருக் கானில் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

பீப்லி லைவ்

வறுமையில் வாடும் விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்காளுக்கு அரசு நிதியுதவி கிடைக்கும் என்பதற்காக தற்கொலை செய்ய திட்டுவது பற்றி திரைப்படம் இது.

இந்த கதையில் விவசாயிகள் பிரச்னை, மீடியா பரபரப்பு மற்றும் அரசியல் ஊழல் ஆகிய பிரச்னைகளை நையாண்டியாக காட்சிபடுத்தியிருப்பார் இயக்குநர் அனுஷா ரிஸ்வி.

இந்த திரைப்படத்தை அமிர்கான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Black - பிளாக் (2005)

சஞ்சய் லீலா பாண்சலி இயக்கிய மற்றொரு திரைப்படமான பிளாக் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஆனால் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்படவில்லை.

கண் தெரியாத, காது கேட்பாத பெண்ணுக்கும் அவரது ஆசிரியருக்கும் இடையிலான உறவைப் பற்றியது இந்த திரைப்படம்.

இதன் திரைமொழிக்காகவும் கலைஞர்களின் நடிப்புக்காகவும் பாராட்டப்பட்டது.

Court - கோர்ட் (2014) 

மராத்தி படமான இதனை சைதன்ய தம்ஹானே என்பவர் இயக்கியிருக்கிறார்.

சமூக வர்ணனை மற்றும் தனித்துவமான கதை சொல்லும் பாணிக்காக இது கொண்டாடப்பட்டது.

மும்பையில் உள்ள சிறிய கோர்டில் நடைபெறும் விசாரணையைப் பற்றிய இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது.

ஆனால் ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்படவில்லை.

Village Rockstars - வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (2017)

வடகிழக்கு மாநிலமான அஸாமைச் சேர்ந்த துனா என்ற சிறுமி கையில் கிட்டார் வைத்துக்கொண்டு ராக் இசைக்கலைஞர் போல கற்பனையில் வாழ்வார்.

அந்த துனாவைப் பற்றியக் கதைதான் இந்தியன் ராக்ஸ்டார்ஸ். இந்தியா கிராமங்களின் அழகையும், அங்குள்ள மக்கள் சந்திக்கும் இன்னல்களையும் பற்றிப் பேசுகிறது இந்த படம்.

ரிமா தாஸ் என்பவர் இதனை இயக்கியிருக்கிறார்.

Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்
உலகச் சினிமா : நிச்சயம் பார்க்க வேண்டிய 50 திரைப்படங்கள் | 50 Must watch World Movies

Jallikattu - ஜல்லிக்கட்டு (2019)

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கிய இந்த திரைப்படம் ஹரீஷ் என்பவர் எழுதிய மாவொயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

கறிக்கடையில் இருந்து தப்பிய எறுமையை மக்கள் பின் தொடர்ந்து விரட்டிச் செல்லும் கதைதான் ஜல்லிக்கட்டு. மிகவும் தனித்துவமான பாணியில் சொல்லப்ப்பட்டிருந்தது.

எறுமையை விட ஒவ்வொரு சந்தர்பத்திலும் கிராமத்து மக்களின் நிலைப்பாடு, எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதையே இந்த படம் காட்டியது.

இதன் கிளைமேக்ஸ் மிகவும் விறுவிறுப்பானதாகவும், சிந்திக்கத்தூண்டுவதாகவும் இருந்தது.

Oscars 2023 : பதோர் பாஞ்சாலி முதல் ஜல்லிக்கட்டு - ஆஸ்கர் பெற தகுதியான 10 இந்திய படங்கள்
உலகின் சிறந்த 250 படங்கள் இவை தான் - IMDB கூறும் சினிமா - Part 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com