மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகரும், முதல் தலித் நடிகருமான பி.கே ரோஸிக்கு டூடுல் வெளியிட்டு கௌரவித்துள்ளது கூகுள்.
1903ம் ஆண்டு பிறந்த ரோஸி மிகவும் சுட்டிப் பெண்ணாக வளர்ந்தார். இயல்பாகவே அவருக்கு நடிப்பின் மீது அதீத ஆர்வம் இருந்து வந்தது.
தனது 25வது வயதில் ரோஸி 'விகதகுமாரன்’ (தி லாஸ்ட் சைல்ட்) என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவரது சிறப்பான நடிப்பு பாராட்டப்பட்டது. மிகவும் பிரபலமடைந்தார். ஆனால் அதனால் அவருக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டன.
இந்திய சினிமாவின் தொடக்க காலம் அது. தலித் பெண்ணான ரோஸி சரோஜினி என்ற உயர்சாதி பெண் பாத்திரத்தில் நடித்திருந்ததும், அதில் பூவொன்றை முத்தமிடும் காட்சி இருந்ததும் சர்ச்சையானது.
பி.கே.ரோஸிக்கு எதிராக கலவரங்கள் அரங்கேறின. அவரது வீடு எரிக்கப்பட்டதாக கூட தகவல்கள் கூறுகின்றன.
கேரளாவில் இருந்து லாரி வழியாக பயணித்து தமிழகம் வந்து சேர்ந்தார் பி.கே.ரோஸி.
லாரி டிரைவருடன் காதல்வயப்பட்டவர் தன் பெயரை ராஜம்மாள் என மாற்றிக்கொண்டு 1980 வரை வாழ்ந்து மறைந்தார்.
விகதகுமாரன் மலையாள சினிமாவின் முதல் படமாகும். சார்லி சாப்ளினின் தி கிட் திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது. எனவே இந்திய புராணங்களின் தாக்கம் இல்லாமல் எழுதப்பட்ட படமாகவும் திகழ்கிறது.
இந்த படத்தை இயக்கியவர் ஜே.சி.டேனியேல். இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு 2013ம் ஆண்டு செல்லுலாய்ட் என்ற படம் தயாரிக்கப்பட்டது.
செல்லுலாய்ட் படத்தில் பி.கே.ரோஸியின் கதாப்பாத்திரத்தில் பாடகி சாந்தினி நடித்திருப்பார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust