வைரமுத்து 

வைரமுத்து 

Facebook

நீட் தேர்வு விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரம் : வைரமுத்து எமோஷனல் ட்விட்

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குத் தமிழகத்தின் பல அட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

கவிஞர் வைரமுத்து இது குறித்து பதிவிட்டுள்ள ட்விட் ட்ரெண்டாகி வருகிறது.

கவிதை வடிவில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள வைரமுத்து, “திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமில்லாது, கவிதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்கள் மூலமும் பிரபலமடைந்தவர் வைரமுத்து. இப்போது இருக்கிற இளம் எழுத்தாளர்களுடனும் போட்டிப் போட்டு எழுதுகிறார். அதுபோலவே சமூக வலைதளாங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

<div class="paragraphs"><p>வைரமுத்து&nbsp;</p></div>
விவேகானந்தர் பிறந்தநாள் ; உங்கள் வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய 25 பொன்மொழிகள்

ஆளுநரின் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவுள்ள முதல்வரின் அறிவிப்பை தன் பதிவில் சுட்டிக்காட்டிய வைரமுத்து, ராஜ் பவன் மட்டும் இல்லாது, குடிசையில் இருக்கும் ஏழை மக்களும் நாளை அரசு எடுக்கப் போகும் முடிவை எதிர்பார்த்துக் கவனிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.


எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,

"திமுக ஆட்சி அமையும் போது 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்; பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்; இது உறுதி. 8 மாதங்கள் பொறுத்திருங்கள்; விடியல் பிறக்கும் என்று சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூறியவர் தான் முதல்வர் ஸ்டாலின்.

2010-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட போதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்'என்ற பிரச்சனையே வந்திருக்காது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்திடுக!” எனத் தனது ட்விட்டரில் பதிவிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

logo
Newssense
newssense.vikatan.com