Kashmir Files

Kashmir Files

Twitter

Kashmir Files : படம் பார்ப்பதற்கு காவல்துறைக்கு விடுப்பு

இந்த படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் படக் குழுவினரை பிரதமர் மோடி சந்தித்துப் பாராட்டினார். இது பாலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
Published on

காஷ்மீர் ஃபைல்ஸ் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சக ரீதியாகப் பாராட்டப்பட்டு வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியைக் கதைக் களமாகக் கொண்டு படம் வெளியாகியுள்ளது.


இந்த படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் படக் குழுவினரை பிரதமர் மோடி சந்தித்துப் பாராட்டினார். இது பாலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

பாலிவுட் நடிகையான கங்கனா ராவத், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாலிவுட்டில் நிலவும் அமைதியைக் கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி எண்களும் வெளியாகவில்லை. மாஃபியா தேச விரோத செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைப்பிடிப்பது ஏன் எனத் தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>மோடியுடன் படக்குழு</p></div>

மோடியுடன் படக்குழு

Twitter

இந்த படம் பாஜக கட்சியின் அரசியல் ஆயுதமாக மாறியிருக்கிறது. “Kashmir files என்கிற இந்தி படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம்,சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990ல் ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை 500000க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரை விட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவை தத்ரூபமாகக் காணமுடிகிறது” என்று பாஜக தலைவர் ஹெச்.ராஜா ட்விட் செய்தார்.

இந்த படத்தை அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களும், பாஜக தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் இத்திரைப்படத்திற்குக் கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இந்த படத்துக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், இத்திரைப்படம் பார்க்க, காவல்துறைக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், மாநில அரசு அறிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>Kashmir Files</p></div>
சின்னத்திரையில் நந்தினி மைனா தான் டாப்! 
logo
Newssense
newssense.vikatan.com