அக நக பாடல் வரிகள் : பொன்னியின் செல்வன் 2

கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களான வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் குந்தவை (த்ரிஷா) இடையிலான காதலை பாடும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
அக நக பாடல் வரிகள் : பொன்னியின் செல்வன் 2
அக நக பாடல் வரிகள் : பொன்னியின் செல்வன் 2Twitter

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலாக அக நக பாடல் வெளியாகியிருக்கிறது.

வரலாற்றுப் புனைவு நாவலான கல்கியின் பொன்னியின் செல்வனைத் தழுவி இந்த படல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களான வந்தியத்தேவன் (கார்த்தி) மற்றும் குந்தவை (த்ரிஷா) இடையிலான காதலை பாடும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். சக்தி ஸ்ரீகோபாலன் பாடியுள்ளார்.

அக நக பாடல் வரிகள்

அகநக அகநக முகநகையே

முகநக முகநக முறுநகையே

முறுநக முறுநக தருநகையே

தருநக தருநக வருநனையே

யாரது யாரது புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும் என்மனம் சேர்பது

நடைபழகிடும் தொலை அருவிகளே

முகில் குடித்திடும் மலர் முகடுகளே

குடை பிடித்திடும் நெடுமரச் செறிவே

பனி உதிர்த்திடும் சிறுமலர் துளியே

அழகிய புலமே உனதிள மகள் நான்

வளவனின் நிலமே எனதரசியும் நீ

வளநில சிரிப்பே எனதுயிரடியோ

உனதிளம் வனப்பே எனக்கினிதடியோ

உனை நினைக்கையிலே மனம் சிலிர்த்திடுதே

உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே

உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே

நினைவழிந்திடுதே

அகநக அகநக முகநகையே

முகநக முகநக முறுநகையே

முறுநக முறுநக தருநகையே

தருநக தருநக வருநனையே

யாரது யாரது புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும் என்மனம் சேர்பது

யாரது யாரது புன்னகை கோர்ப்பது

யாவிலும் யாவிலும் என்மனம் சேர்பது

அக நக பாடல் வரிகள் : பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2: வெளியானது ”அக நக” பாடல் - குந்தவை - வந்தியத்தேவனின் காதல் டிராக்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com