பொன்னியின் செல்வன் : ஏ ஆர் ரஹ்மான் குரலில் நாளை வெளியாகிறது முதல் பாடல்

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்டிவிட்டர்
Published on

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தின் திரைப்படம். இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்?

பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர்களாக சரத்குமார், பார்த்திபன் மற்றும் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்

படக்குழு முக்கிய கதாபாத்திரங்களின் லுக்ஸை பிரத்தியேகமாக வெளியிட்டது. திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த First Single நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 'பொன்னி நதி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் குரலில் உருவாகியிருக்கிறது பொன்னி நதி!

இவரைத் தவிர தமிழில் பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன், சிவா அனந்த், மற்றும் கிருதிக்கா நெல்சன் ஆகியோரும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் : அருள்மொழியா? அருண்மொழியா? - மகுடேஸ்வரன் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com