Ponniyin Selvan: வெளியானது 'சோழா சோழா' பாடலின் Glimpse - ஆதித்த கரிகாலனின் என்ட்ரி சாங்?

இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களுள் ஒன்றான, ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.
சோழா சோழா பாடல்
சோழா சோழா பாடல் டிவிட்டர்
Published on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் விகரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த மாதம் வெளியானது.


வந்தியத்தேவன் சோழ நாட்டுக்கு செல்லும் பயணப்பாடலாக, பொன்னி நதி பாடல் வெளியானது. இது கார்த்திக்கான அறிமுகப் பாடல் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களுள் ஒன்றான, ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார்.

பொன்னி நதி
பொன்னி நதி யூடியூப்

இன்று மாலை 6 மணிக்கு இத்திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் சோழா சோழா பாடல் வெளியாகவுள்ளது. ஆதித்த கரிகாலனின் புகைப்படத்தோடு இதற்கான அறிவிப்பு வந்த நிலையில், இது விக்ரமுக்கான அறிமுகப்பாடலாக அமையலாம்.

இந்த பாடலை தமிழில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். மேலும் பின்னணி பாடகர்கள் சத்யபிரகாஷ், நகுல் அப்யங்கர், விஎம் மகாலிங்கம் ஆகியோர் பாடியுள்ளனர்.

தெலுங்கில் அனந்தா ஸ்ரீராம் பாடலை எழுதியிருக்க, பாடகர்கள் மனோ மற்றும் அனுராக் குல்கர்னி பாடியுள்ளனர். கன்னடத்தில் பொன்னி நதி பாடலை எழுதிய அதே ஜயந்த் கைகினி எழுதி, ரவிபஸ்ரூர் பாடியுள்ளார்.

மலையாளத்தில் பென்னி தயாள், ஜித்தின் ராஜ் பாடியிருக்க ரஃபீக் அகமது பாடலை எழுதியுள்ளார். மேலும் இந்தியில் மெஹபூப் எழுதி விஷால் மிஸ்ரா, ஸ்வாகத் ராத்தோட் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படலின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ள நிலையில் இன்று மாலை வெளியாகவுள்ள பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சோழா சோழா பாடல்
பொன்னியின் செல்வன் பொன்னி நதி : தமிழில் 53 லட்சம் வியூஸ் - மற்ற மொழிகளில் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com