Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

பொன்னி நதி பாடலை கன்னடத்தில் நகுல் அப்யங்கர், மலையாளத்தில் அல்போன்ஸ் ஜோசப் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தனர்.
AR Rahman
AR RahmanTwitter
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலாக பொன்னி நதி பாடல் கடந்த 31ம் தேதி வெளியானது. ரசிகர்கள் இந்த பாடலை விரும்பினாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அத்துடன் மற்ற மொழிகளிலும் வெளியான வெரசன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடவும் செய்திருந்தார். இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகள் எழுதியிருந்தார்.

கன்னடத்தில் நகுல் அப்யங்கர், மலையாளத்தில் அல்போன்ஸ் ஜோசப் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் இந்த பாடலுக்கு பொருத்தமானதாக இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. சிலர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அரசர்காலத்து பாடலுக்கு ஏற்றதாக இல்லை என்றும் குறிப்பிட்டனர்.

பேஸ்புக் பயனர் ஒருவர், "ரஹ்மான் குரலில் அழகாக இருக்கிறது. சரணத்தின் சில இடங்களில் ஒரு விதமான ஏற்ற,இறக்கம் கொடுத்து பாடும் விதம் அழகு. ஆனால் வரலாற்று பின்னணியிலான கதையில் ஒரு அரசனுக்கான குரல் அல்ல. ஹரிஹரன் (or) கார்த்திக் பாடி இருக்கலாம். இது என் தனிப்பட்ட கருத்து." எனக் கூறியிருக்கிறார்.

"பொன்னி நதி பாட்டு சூப்பரா இருக்கு.

ஆனா என்ன காஞ்சிபுரத்துலருந்து வர்ற வந்தியத்தேவன் பாடுற மாதிரி இல்ல. கலிஃபோர்னியாலருந்து வர்ற வந்தியத் தேவன் பாடுற மாதிரி இருக்கு.." என மற்றொருவர் தெரிவித்திருந்தார்.

சிலர் நகைச்சுவையான கருத்துக்களையும் கூறிவருகின்றனர்.

AR Rahman
பொன்னியின் செல்வன் : பிரமாண்ட படைப்பின் முதல் பாடல் வெளியானது

பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாவது குறித்து பலரும் கூறியது ஒன்றுதான். அதாவது, "பொன்னியின் செல்வன் மூன்று தலைமுறையினரால் வாசிக்கப்பட்ட நாவல். அதனால் எல்லாரையும் திருப்திபடுத்தும் விதமாக படமாக்குவது இயலாத காரியம்". இந்த வரையறைக்குள் இந்த பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

எனினும் சில விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது. அடுத்த பாடல்கள் இன்னும் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்.

AR Rahman
பொன்னியின் செல்வன் பொன்னி நதி : தமிழில் 53 லட்சம் வியூஸ் - மற்ற மொழிகளில் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com