KGF-3 : ராக்கி பாயுடன் இணைகிறாரா பாகுபலி பிரபாஸ்?

KGF 3 படத்தில் பாகுபலி பிரபாஸ் சில காட்சிகளில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் இணையத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது
Prabhas - Yash
Prabhas - YashTwitter
Published on

பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் படம் 2018 ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் செம ஹிட் ஆனதால், பிறகு மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது.

கன்னட படமான கேஜிஎஃப்-ன் முதல் பாகம் இந்திய அளவில் பேசப்பட்டதால் பான் இந்தியா மார்கெட்டை குறிவைத்து கேஜிஎஃப் 2 எடுக்கப்பட்டிருந்தது.

கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேஜிஎஃப், கேஜிஎஃப் சாப்டர் 2 படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து கேஜிஎஃப் சாப்டர் 3 எடுக்கப் போவதாக கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியிலேயே சொல்லி விட்டார்கள்.

Prabhas - Yash
Yash : நாடக கலைஞர் முதல் KGF வரை - யார் இந்த யாஷ்?

இப்படத்தின் படப்பிடிப்பை தற்போதே தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் கேஜிஎஃப் சாப்டர் 3 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் KGF 3 படத்தில் பாகுபலி பட நடிகர் பிரபாஸ் சில காட்சிகளில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் இணையத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது. இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து சலார் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhas - Yash
நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com