Priya Bhavani Shankar : பிரியாணி எப்படி இருந்தது? சொந்த ஹோட்டலில் ரிவியூ கொடுக்கும் நடிகை!

பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு LIAM’s Diner என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
Priya Bhavani Shankar
Priya Bhavani ShankarTwitter
Published on

தன்னுடைய சொந்த ஹோட்டலில் பிரியாணியை ருசித்த நடிகை பிரியா பவானி ஷங்கர், அதற்கு ரிவியூ சொல்லி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய பிரியா பவானி ஷங்கர், விஜேவாக மாறினார். பின்னர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிரியா சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் கால்பதித்தார். ‘மேயாத மான்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமான அவர், ‘கடைக்குட்டி சிங்கம்’ ‘மான்ஸ்டர்’ ‘மாஃபியா’ ‘களத்தில் சந்திப்போம்’ ‘குருதி ஆட்டம்’ ‘யானை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘பொம்மை’ ‘டிமாண்டி காலனி 2’ ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள், சைடில் பிஸ்னஸும் செய்வார்கள். சினிமா நிரந்தரமில்லாத வேலை என்பதால் நடிகைகள் இதில் கிடைக்கும் பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்கின்றன.

அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு LIAM’s Diner என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் நடந்து முடிந்த ரம்ஜான் பண்டிகையன்று தன்னுடைய ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு இருக்கிறார்.

Priya Bhavani Shankar
"காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு சொல்வாங்க..." - பிரியா பவானி சங்கர் Insta post வைரல்

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ என் சொந்த ஹோட்டலில் இந்த ரம்ஜான் பண்டிகையை கழித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த இளம் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

எங்களுக்காக நீங்கள் தயார் செய்த பிரியாணி தால்சா மற்றும் தக்காளி இனிப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய கடையில் எனக்கு எப்போதும் பிடித்தது பேன் ஷேக்தான்.. சியர்ஸ் காய்ஸ்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் பிரியா பவானி சங்கர் ஃபோட்டோவை மட்டும் பார்த்தார்களே தவிர இது அவரின் சொந்த ஹோட்டல் என்று தற்போது தான் தெரிந்துகொண்டனர்.

Priya Bhavani Shankar
பிரியா பவானி சங்கர்: ”சொம்பு கொடுத்தா தான்...” நான் அப்படி சொல்லவே இல்லை - நடிகை விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com