பொன்னியின் செல்வன்: அமேசான் பிரைமில் வெளியாகிறது PS 1

படம் உலகளவில் வெளியாகி நான்கு வாரங்கள் கடந்துள்ள நிலையில், கிட்ட தட்ட 500 கோடி வசூலை எட்டியுள்ளது. அதிக வசூல் பெற்ற இந்திய படங்களில் ஒன்றாக இருக்கிறது பொன்னியின் செல்வன். தமிழகத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் டிவிட்டர்
Published on

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி அமெசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இன்று முதல் திரைப்படத்தை ரென்ட் செய்து பார்த்துக்கொள்ளலாம்.

கல்கி எழுதிய வரலாற்று கற்பனை கதை பொன்னியின் செல்வன். இது இரண்டு பாகங்களாக திரையாக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியானது.

ஆதித்த கரிகாலன் - வந்தியத்தேவன் - அருள்மொழி வர்மன்
ஆதித்த கரிகாலன் - வந்தியத்தேவன் - அருள்மொழி வர்மன்டிவிட்டர்

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையைல், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இனைந்து திரைப்படத்தை தயாரித்தது. எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல், மற்றும் மணிரத்னம் திரைக்கதை எழுதினர்.

படம் உலகளவில் வெளியாகி நான்கு வாரங்கள் கடந்துள்ள நிலையில், கிட்ட தட்ட 500 கோடி வசூலை எட்டியுள்ளது. அதிக வசூல் பெற்ற இந்திய படங்களில் ஒன்றாக இருக்கிறது பொன்னியின் செல்வன். தமிழகத்தில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், திரைப்படம் தற்போது பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள படம், இன்று முதல் ரென்ட் செய்து பார்த்துக் கொள்ளும் வசதியுடன் வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகியுள்ளது

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்: திரையுலகின் 70 ஆண்டு கனவு; படம் வென்றதா? காரை அக்பர் விமர்சனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com